பொது செய்தி

தமிழ்நாடு

புதுகை கோவிலில் ரவிசங்கர் தரிசனம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
.புதுக்கோட்டை,- புதுக்கோட்டை கோவிலில் வாழும் கலை அமைப்பின் தலைவர் பரம்பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தரிசனம் செய்தார்.புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதுாத வித்யாபீடம் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன. கோவில் சாதுர்மாஸ்ய விரத அனுஷ்டானம் ஹோமம், 60 நாட்களாக நடந்து வருகிறது.வாழும் கலை அமைப்பின் தலைவர் பரமபூஜ்ய ஸ்ரீஸ்ரீ
 புதுகை கோவிலில்  ரவிசங்கர் தரிசனம்

.புதுக்கோட்டை,- புதுக்கோட்டை கோவிலில் வாழும் கலை அமைப்பின் தலைவர் பரம்பூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் தரிசனம் செய்தார்.புதுக்கோட்டையில் உள்ள புவனேஸ்வரி அவதுாத வித்யாபீடம் கோவில் பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன. கோவில் சாதுர்மாஸ்ய விரத அனுஷ்டானம் ஹோமம், 60 நாட்களாக நடந்து வருகிறது.வாழும் கலை அமைப்பின் தலைவர் பரமபூஜ்ய ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், நேற்று புவனேஸ்வரி அம்மனுக்கு கோவிலுக்கு வந்தார். கோவில் நிர்வாகம் சார்பில், அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தினார்.

திருப்பணிகள் நடக்கும் இடத்தில் சிறப்பு பூஜைகள் செய்தார். பின் அவர் கூறியதாவது: கொரோனா காலத்தில் பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோயில்லாமல் வாழ யோகாசனம் உள்ளிட்ட பயிற்சிகளை தினந்தோறும் செய்ய வேண்டும். இலங்கையில் உள்ள தமிழர்களின் நிலை குறித்து கூர்ந்து கவனித்து வருகிறோம்.

இலங்கை தமிழர் குறித்து விரைவில் புத்தகம் ஒன்று வெளியிட உள்ளேன். தமிழகத்தில் ஹிந்து மக்கள் உட்பட, அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையுடன் வாழவேண்டும். அதற்கு என்னுடைய முயற்சிகளை மேற்கொள்வேன். அடுத்த முறை தமிழகத்திற்கு வரும் போது, முதல்வரை சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.****

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X