பொது செய்தி

தமிழ்நாடு

'புள்ளிங்கோ கட்டிங்'குடன் பள்ளிக்கு வந்த 120 மாணவருக்கு மீண்டும் 'ஹேர் கட்டிங்'

Added : செப் 21, 2021
Share
Advertisement
வேலுார்-பள்ளிக்கு 'புள்ளிங்கோ கட்டிங்' செய்து வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் 'ஹேர் கட்டிங்' செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணாக, பள்ளி மாணவர்கள் நீண்ட காலம் வீட்டிலேயே இருந்து 'ஆன்லைனில்' கல்வி கற்று வந்தனர். அப்போது பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் கட், ஸ்பைட்டர் மேன், சிம்பன்சி, குரங்கு கட்டிங் என விதவிதமான ஹேர் கட்டிங் செய்து அழகு பார்த்தனர். இவ்வாறு
 'புள்ளிங்கோ கட்டிங்'குடன் பள்ளிக்கு வந்த 120 மாணவருக்கு மீண்டும் 'ஹேர் கட்டிங்'

வேலுார்-பள்ளிக்கு 'புள்ளிங்கோ கட்டிங்' செய்து வந்த 120 மாணவர்களுக்கு மீண்டும் 'ஹேர் கட்டிங்' செய்யப்பட்டது.கொரோனா ஊரடங்கு காரணாக, பள்ளி மாணவர்கள் நீண்ட காலம் வீட்டிலேயே இருந்து 'ஆன்லைனில்' கல்வி கற்று வந்தனர். அப்போது பாக்ஸ் கட்டிங், ஒன் சைட், வி கட், ஸ்பைக் கட், ஸ்பைட்டர் மேன், சிம்பன்சி, குரங்கு கட்டிங் என விதவிதமான ஹேர் கட்டிங் செய்து அழகு பார்த்தனர்.

இவ்வாறு முடிவெட்டி கொள்பவர்கள் 'புள்ளிங்கோ' என, அழைக்கப்படுகின்றனர். கடந்த 1ல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. சிலர் ஹேர் கட்டிங்கை மாற்றாமல் பள்ளி வந்தனர். இந்நிலையில், புள்ளிங்கோ கட்டிங்குடன் வேலுார் அண்ணாசாலையில், திருமலை - திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான, வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் வந்தனர். இது ஒழுங்கீனமாக இருப்பதால், சாதாரணமாக கட்டிங் செய்து வரும்படி தலைமையாசிரியர் நெப்போலியன், மாணவர்களிடம் அறிவுறுத்தினார்.அதை மாணவர்கள் காதில் வாங்கி கொள்ளவில்லை. இனி சரி பட்டுவராது என நினைத்த தலைமை ஆசிரியர் அதிரடியாக நேற்று காலை 9:00 மணிக்கு பள்ளிக்கு முடி திருத்தும் தொழிலாளர்களை வரவழைத்தார்.

அப்போது புள்ளிங்கோ ஹேர் கட்டிங்குடன் வந்த மாணவர்களை, வகுப்பறைக்கு செல்ல விடாமல் தடுத்து வரிசையாக மரத்தடியில் நிற்க வைத்தார். அங்கு அவர்களுக்கு, சாதாரணமாக கட்டிங் செய்யப்பட்டது.இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் நெப்போலியன் கூறுகையில், ''நேற்று பிளஸ் 1, பிளஸ் 2, படிக்கும் 120 பேருக்கு புள்ளிங்கோ கட்டிங் அகற்றப்பட்டு சாதாரண கட்டிங் செய்யப்பட்டது.

இது குறித்து அவர்களின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இன்று 9, 10 ம் வகுப்பு மணவர்களுக்கு புள்ளிங்கோ கட்டிங் அகற்றப்படுகிறது. நல் ஒழுக்கம் பெற்ற நல்ல மாணவர்களாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தில், இது போன்ற பணி துவங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X