சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் மூழ்கி மகன் பலி அதிர்ச்சியில் தாயும் சாவு

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஆற்றில் மூழ்கி மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.புதுச்சேரி, மேட்டுப்பாளையம் சண்முகாபுரத்தை சேர்ந்தவர் ஜீவா, 20; மேட்டுப்பாளையத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் சேர்ந்து நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மீன் பிடித்தார். அப்போது ஜீவா நீரில் மூழ்கி

புதுச்சேரி-ஆற்றில் மூழ்கி மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.புதுச்சேரி, மேட்டுப்பாளையம் சண்முகாபுரத்தை சேர்ந்தவர் ஜீவா, 20; மேட்டுப்பாளையத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்டரில் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் சேர்ந்து நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மீன் பிடித்தார். அப்போது ஜீவா நீரில் மூழ்கி மாயமானார். தீயணைப்பு படை வீரர்கள், கடலோர காவல் படையினர் உதவியுடன் ஜீவாவை தேடியும் கிடைக்கவில்லை. நேற்று காலை 8.௦௦ மணியளவில் ஜீவாவின் உடல் கரை ஒதுங்கியது. போலீசார், உடலை மீட்டு கதிர் காமம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆற்றில் மூழ்கி மகன் இறந்த செய்தியை கேட்ட, அவரது தாய் லட்சுமி, 46 என்பவருக்கு அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X