பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறை

Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
சேலம்,-திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்ணை கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சேலம், பெரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 32; தனியார் பள்ளி ஆசிரியர். 2012ல், கரியகோவில் அருகில் உள்ள கணக்கம்பட்டி பகுதியில் பணிபுரிந்த போது, அப்பகுதியில் சேவையாற்றி வந்த 25 வயது பெண்ணுடன் பழக்கம்

சேலம்,-திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்ணை கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சேலம், பெரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 32; தனியார் பள்ளி ஆசிரியர். 2012ல், கரியகோவில் அருகில் உள்ள கணக்கம்பட்டி பகுதியில் பணிபுரிந்த போது, அப்பகுதியில் சேவையாற்றி வந்த 25 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.11 ஆயிரம் அபராதம்திருமண ஆசை காட்டி, பல முறை பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண் கர்ப்பமான நிலையில், அவரை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். புகார்படி கரியகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. செந்தில்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X