சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மீது ரயில் மோதல் போக்குவரத்து பாதிப்பு

Added : செப் 21, 2021
Share
Advertisement
ஓசூர்,-கர்நாடக மாநில எல்லையில் லாரி மீது ரயில் மோதியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, தமிழக எல்லையான ஓசூர், சேலம், கரூர், திருச்சி வழியாக, மயிலாடுதுறைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து, 25 கி.மீ., தொலைவில், கர்நாடக மாநில எல்லையான ஆனைக்கல் அருகே கார்மேலரம் - ஹீலலிகே
 லாரி மீது ரயில் மோதல் போக்குவரத்து பாதிப்பு

ஓசூர்,-கர்நாடக மாநில எல்லையில் லாரி மீது ரயில் மோதியதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.கர்நாடக மாநிலம் மைசூரிலிருந்து, தமிழக எல்லையான ஓசூர், சேலம், கரூர், திருச்சி வழியாக, மயிலாடுதுறைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. தமிழகத்திலிருந்து, 25 கி.மீ., தொலைவில், கர்நாடக மாநில எல்லையான ஆனைக்கல் அருகே கார்மேலரம் - ஹீலலிகே இடையே, நேற்றிரவு 8:10 மணிக்கு மைசூரு - மயிலாடுதுறை ரயில் வந்து கொண்டிருந்தது.அப்போது, ரயில்வே தண்டவாளத்தை கடந்த லாரி மீது, ரயில் இன்ஜின் மோதியது. லாரி முழுதும் உருக்குலைந்து, ரயில் இன்ஜினுக்கு கீழே சிக்கியது. இதனால், நான்கு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் உயிர்பலி ஏதும் இல்லை. ஆனைக்கல் - ஓசூர் ரயில் பாதை, சிங்கிள் லைன் என்பதால், அவ்வழியாக செல்ல வேண்டிய மைசூரு - துாத்துக்குடி ரயில், கர்நாடக மாநிலம், பையப்பனஹள்ளி ரயில்வே ஸ்டேஷனிலும், யஷ்வந்த்பூர் - கண்ணனுார் ரயில், கார்மேலரம் ரயில்வே ஸ்டேஷனிலும் நிறுத்தப்பட்டன. அதேபோல், கர்நாடக மாநிலம் வழியாக தமிழகத்திற்கு வர வேண்டிய மற்ற ரயில்களும் ஆங்காங்கே நடுவழியில்நிறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X