பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: ராமதாஸ் பாக்கெட்டில் காரணங்கள்!

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (41)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு வழியாக பா.ம.க., விலகி விட்டது. ஆனால் அதற்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள் தான் நகைக்கத்தக்கவை.'அ.தி.மு.க., தலைமை சரியில்லை; கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த லாபமும்
இது, உங்கள், இடம், ராமதாஸ்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



என்.வைகை வளவன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து ஒரு வழியாக பா.ம.க., விலகி விட்டது. ஆனால் அதற்கு அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சொல்லும் காரணங்கள் தான் நகைக்கத்தக்கவை.'அ.தி.மு.க., தலைமை சரியில்லை; கூட்டணியால் பா.ம.க.,வுக்கு எந்த லாபமும் இல்லை; கூட்டணி தர்மத்தை காக்க அ.தி.மு.க., தவறி விட்டது...' இப்படி அடுக்கடுக்கான காரணங்களை செப்பியிருக்கிறார் ராமதாஸ்.இதிலிருந்தே, ராமதாசுக்கு மனசாட்சியே இல்லை என்பது தெரிகிறது.

பா.ம.க.,வின் நிர்பந்தம் காரணமாக, வன்னியருக்கு 12.5 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுத்தது, அ.தி.மு.க., அரசு தான்.காரியம் முடிந்ததும், அ.தி.மு.க., தலைமைக்கு, 'பெப்பே' காட்டியுள்ளார், ராமதாஸ். அ.தி.மு.க., தலைமைக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்.கூட்டணியில் சேர ஒரு காரணமும், விலக வேறொரு காரணமும், டாக்டர் ராமதாசின், 'பாக்கெட்'டில் எப்போதும் தயாராக இருக்கும்.

சட்டசபையில் தி.மு.க.,வை பா.ம.க., 'ஆஹா ஓஹோ...' என புகழ்ந்து தள்ளுவதில் இருந்தே மருத்துவர் ராமதாசின் கபட நாடகம் அம்பலமாகி விட்டது.உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதால், ஓரிரு இடங்களில் மட்டுமே பா.ம.க., வெற்றி பெற முடியும். ராமதாசின் முடிவு, யானை தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட கதையாக உள்ளது.


latest tamil news


'அடுத்த சட்டசபை தேர்தலில் 150 இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும்' என, அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதில் இருந்தே தெரிகிறது, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து அக்கட்சியும் 'கழன்று' கொள்ள போகிறது என்பது.இந்த, 'தில்லாலங்கடி' வேலை எல்லாம் தெரிந்து தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துப் போட்டியிட்டு, ஆட்சியை பிடித்தார்.அந்த தைரியம் எல்லாம் இப்போது இருக்கும் அ.தி.மு.க., தலைமைக்கு இல்லை.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202120:45:32 IST Report Abuse
jayvee உங்க அரசியல் அனுபவம்தான் அவனோட வயசு.. ஆனா உங்களைவிட அதிகமா வாக்கு வாங்குறான்.. அதுவும் வெறும் அஞ்சு வருஷத்திலே. ஆனா நீங்க.. அசிங்கம் தலைவரே
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
21-செப்-202122:08:13 IST Report Abuse
Anantharaman Srinivasan ராமதாஸ் அரசியல் செய்வதைவிட அப்பனும் பிள்ளையும் தைலாபுரத்தில் வேறு தொழில் செய்யலாமே.. இவரும் டாக்டர்ககள்.
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
21-செப்-202120:03:29 IST Report Abuse
Vena Suna பாமக என்றால் பார்த்து மாற்று கட்சியை.சமயத்திற்கு ஏற்றார் போல் இவர்கள் கூட்டணி மாறும்.சந்தர்ப்பவாதம்.நன்றி இன்மை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X