கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு விவகாரம்: கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் தந்தையிடம் விசாரணை

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
Advertisement
ஊட்டி: கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, தற்கொலை செய்த தினேஷ் வழக்கு மறு விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தினேஷ் தந்தையிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொல்லப்பட்டார். அங்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்த தினேஷ்,

ஊட்டி: கோடநாடு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு, தற்கொலை செய்த தினேஷ் வழக்கு மறு விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தினேஷ் தந்தையிடம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.



latest tamil news


கோத்தகிரி கோடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்., 24ம் தேதி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் கொல்லப்பட்டார். அங்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்த தினேஷ், ஜூலை 5ம் தேதி தற்கொலை செய்து கொண்டார்.

வழக்கில், கடந்த ஆக., 17ம் தேதி ஐந்து மணி நேரம், வழக்கின் முக்கிய நபரான சயானிடம் விசாரணை மேற்கொண்டு 'வீடியோ'வில் பதிவு செய்தனர். அதன்பின், பலரிடம் நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கோத்தகிரி சோலுார் மட்டம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், 'கோடநாடு எஸ்டேட்டில் பணிபுரிந்த தினேஷ் தற்கொலை வழக்கில் சில தகவல் கிடைத்திருப்பதால், வழக்கை மறு விசாரணை செய்வதற்கு அனுமதி வேண்டும்' என, கோத்தகிரி தாசில்தார் சீனிவாசனிடம் நேற்று மனு அளித்துள்ளார்.


latest tamil news


தாசில்தார் சீனிவாசன் கூறுகையில், ''தினேஷ் தற்கொலை வழக்கு குறித்து மறு விசாரணைக்கு அனுமதி கோரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மனு அளித்துள்ளார். மனு ஏற்கப்பட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

இந்நிலையில், தினேஷின் தந்தை போஜனின் வீட்டுக்குச் சென்ற தனிப்படை ஏ.டி.எஸ். பி., கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான போலீசார், 2 மணி நேரம் விசாரணை செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X