பொது செய்தி

இந்தியா

கிரானைட் கற்களால் தடுமாறும் பாதசாரிகள்

Added : செப் 21, 2021
Share
Advertisement
கோலார் : ''ம.ஜ.த., மூலம் பெற்ற எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, சீனிவாச கவுடா எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லட்டும்,'' என, கோலார் மாவட்ட ம.ஜ.த., முன்னாள் தலைவர் வெங்கடசிவா ரெட்டி கிரானைட் கற்களால் தடுமாறும் பாதசாரிகள் சவால் விடுத்துள்ளார்.கே.சி., வேலி என்ற கோரமங்களா - செல்லகட்டா குடிநீர் திட்டத்தின் தண்ணீர் விஷயத்தில், கோலார் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சீனிவாச கவுடா,

கோலார் : ''ம.ஜ.த., மூலம் பெற்ற எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, சீனிவாச கவுடா எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லட்டும்,'' என, கோலார் மாவட்ட ம.ஜ.த., முன்னாள் தலைவர் வெங்கடசிவா ரெட்டி கிரானைட் கற்களால் தடுமாறும் பாதசாரிகள் சவால் விடுத்துள்ளார்.

கே.சி., வேலி என்ற கோரமங்களா - செல்லகட்டா குடிநீர் திட்டத்தின் தண்ணீர் விஷயத்தில், கோலார் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., சீனிவாச கவுடா, தன் கட்சி தலைவர் குமாரசாமிக்கு கண்டனம் தெரிவித்து பேசினார்.இதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், ம.ஜ.த.,விலிருந்து ராஜினாமா செய்து காங்கிரசில் இணைவதாக, சீனிவாச கவுடா அறிவித்துள்ளார்.இது குறித்து, கோலார் மாவட்ட ம.ஜ.த., முன்னாள் தலைவர் வெங்கடசிவா ரெட்டி, நேற்று கூறியதாவது:உணவளித்த வீட்டுக்கு சீனிவாச கவுடா துரோகம் செய்துள்ளார். தேவகவுடா குடும்பத்தின் ஆதரவில் இருந்தோர், அவருக்கு எதிராகவே பேசி, ஈனத்தனமாக நடந்து கொள்கின்றனர்.ம.ஜ.த., சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் முதலில் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்லட்டும்.கே.சி., வேலி தண்ணீரை, வீட்டுக்கு கொண்டு சென்று, எவ்வளவு வேண்டுமானாலும் குடியுங்கள் என, கூறியவர் யார்?குமாரசாமி ஆட்சியை பற்றி பேசும் யோக்கியதை, உள்ளதா. நாட்டுக்கே முன் மாதிரியாக விவசாயிகளின் கடனை ரத்து செய்தார். இப்படிப்பட்ட நபரை பற்றி, வாய்க்கு வந்தபடி பேசுவது சரியல்ல.இவருக்கு டிக்கெட் தரும்படி குமாரசாமியிடம் சிபாரிசு செய்ததே நான்தான். அதன் பின் எம்.எல்.ஏ.,வாகி யாருடைய பேச்சை கேட்டுக்கொண்டு, கட்சிக்கு துரோகம் செய்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X