அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது' : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

Added : செப் 21, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது'முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், செப்., 17ல், உ.பி., மாநிலம், லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், தமிழகம் சார்பில் பேச வேண்டிய ஏராளமான பிரச்னைகள் இருந்தும், தமிழக நிதி அமைச்சர் பங்கேற்கவில்லை. இது, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி.

தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது'முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், செப்., 17ல், உ.பி., மாநிலம், லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், தமிழகம் சார்பில் பேச வேண்டிய ஏராளமான பிரச்னைகள் இருந்தும், தமிழக நிதி அமைச்சர் பங்கேற்கவில்லை.

இது, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி. இணையதள வழியில் நடந்த கவுன்சில் கூட்டம், 20 மாதங்களுக்கு பின், நேருக்கு நேர் சந்திப்பில் நடந்தது. அதில், சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரை, அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.தமிழக பிரச்னைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை; இது, மக்களை மதிக்காத எதேச்சதிகாரம்என்பது, பா.ஜ.,வின் கருத்து மட்டும் அல்ல; தமிழக மக்களின் நிலைப்பாடும் அதுவே.தங்களின் நிதி அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில், தான் பங்கேற்க இயலாத காரணத்தை சொன்ன போது, தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது.

வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருப்பதால் தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் நிதி அமைச்சர். இதிலிருந்து, தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது. முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையில் அமைச்சராக இருந்தும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்களில், தமிழக நலனுக்காக பங்கு பெறாமல், அதன் மதிப்பை பழித்து பேசுவதை, அரசியல் எதிர்ப்பாக இல்லை; அரசியல் சாசன எதிர்ப்பாக தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
21-செப்-202121:55:32 IST Report Abuse
BASKAR TETCHANA இந்த கூறு கேட்ட குப்பனுக்கு நிதி அமைச்சர் பதவி. நாளை பிரதமர் மீட்டிங் நடந்தால் நான் முக்கியமான பிரசவ வேளையில் இருப்பதால் வர முடியவில்லை என்பான் இந்த இரண்டு வாட்சகாரன். .
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
21-செப்-202121:33:10 IST Report Abuse
S. Narayanan G S T கூட்டத்தில் கலந்து கொள்ள எதர்ப்பு அழைக்கிறார்கள். எல்லோருடைய கருத்துக்களையும் அறிந்து கொள்ள தானே. அப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கும் போது ஒரு நிதி அமைச்சராக நம் தமிழ் நாட்டின் தேவைகள் என்ன G. S T எதை சேர்க்கலாம் எதை தவிர்க்கலாம் என்பது எல்லோருக்கும் புரியும் வகையில் எத்து கூறி தமிழ் மக்களுக்கு தேவையான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யாமல் விட்டு விட்டால் அதன் மகத்துவம் தெரியவில்லை என்று தானே கூற வேண்டும். உண்மையான நாட்டுப்பற்று இருந்தால் ஸ்டாலின் மற்றும் நிதி அமைச்சர் இப்படி செய்து இருக்க மாட்டார்கள். ஜெய்ஹிந்த்
Rate this:
Cancel
21-செப்-202107:27:07 IST Report Abuse
குமரன் வளைகாப்பில் சினை இட்லி அவித்து கொடுக்க போயிருப்பார் நிதியமைச்சர் அவர்கள் கொரானா தடுப்பு காலத்தில் ஒரு சாதாரண பொறுப்பில் இருக்கும் உதவி காவல் ஆய்வாளர் அவர்கள் தன்னை பெற்று வளர்த்த தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொள்ளாமல் நோய்தடுப்பு பணியில் தன்னை அற்பணித்துக்கொண்டார் அதுதான் தியாகம். வாய்ச்சவடலில் வல்லவர் நிதியமைச்சர் செயல் ஒரு பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X