தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது' : ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

Added : செப் 21, 2021 | கருத்துகள் (5)
Share
தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது'முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், செப்., 17ல், உ.பி., மாநிலம், லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், தமிழகம் சார்பில் பேச வேண்டிய ஏராளமான பிரச்னைகள் இருந்தும், தமிழக நிதி அமைச்சர் பங்கேற்கவில்லை. இது, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி.

தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது'முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதம்: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், செப்., 17ல், உ.பி., மாநிலம், லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில், தமிழகம் சார்பில் பேச வேண்டிய ஏராளமான பிரச்னைகள் இருந்தும், தமிழக நிதி அமைச்சர் பங்கேற்கவில்லை.

இது, தமிழக மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செய்தி. இணையதள வழியில் நடந்த கவுன்சில் கூட்டம், 20 மாதங்களுக்கு பின், நேருக்கு நேர் சந்திப்பில் நடந்தது. அதில், சாமானிய மக்கள் முதல் நிறுவனங்கள் வரை, அனைத்து தரப்பினருக்குமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.தமிழக பிரச்னைகளை எடுத்துரைக்க எவரும் இல்லை; இது, மக்களை மதிக்காத எதேச்சதிகாரம்என்பது, பா.ஜ.,வின் கருத்து மட்டும் அல்ல; தமிழக மக்களின் நிலைப்பாடும் அதுவே.தங்களின் நிதி அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில், தான் பங்கேற்க இயலாத காரணத்தை சொன்ன போது, தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது.

வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டி இருப்பதால் தான் செல்லவில்லை என்று கூறுபவரா, நம் நிதி அமைச்சர். இதிலிருந்து, தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது. முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறையில் அமைச்சராக இருந்தும், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டங்களில், தமிழக நலனுக்காக பங்கு பெறாமல், அதன் மதிப்பை பழித்து பேசுவதை, அரசியல் எதிர்ப்பாக இல்லை; அரசியல் சாசன எதிர்ப்பாக தான் பார்க்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X