பொது செய்தி

இந்தியா

பாலியல் பலாத்காரம்; குற்றவாளி கைது

Added : செப் 21, 2021
Share
Advertisement
சஞ்சய்நகர் : பெங்களூரு சஞ்சய்நகர் பகுதியில், மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர், 5 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் செய்ததால், சிறுமியின் உறவினர்கள், விடிய விடிய போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.பெங்களூரு சஞ்சய்நகரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த, 23 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
பாலியல் பலாத்காரம்; குற்றவாளி கைது

சஞ்சய்நகர் : பெங்களூரு சஞ்சய்நகர் பகுதியில், மேற்கு வங்கத்தை சேர்ந்த வாலிபர், 5 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம் செய்ததால், சிறுமியின் உறவினர்கள், விடிய விடிய போலீஸ் நிலையம் முன் போராட்டம் நடத்தினர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது.பெங்களூரு சஞ்சய்நகரில் மேற்கு வங்கத்தை சேர்ந்த, 23 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.வயிற்று வலி என்று பெற்றோரிடம் சிறுமி சொன்ன பிறகே, உண்மை வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசாரும், அந்த நபரை நேற்று முன் தினம் கைது செய்தனர்.இதையறிந்த சிறுமியின் உறவினர்கள், போலீஸ் நிலையம் முன் குவிந்து, அந்த நபரை தங்களிடம் ஒப்படைக்கும்படி நேற்று முன்தினம் நள்ளிரவு போராட்டம் நடத்தினர்.விடிய விடிய நுாற்றுக்கணக்கான மகளிர், போலீஸ் நிலையம் முன் குவிந்தனர். அவர்கள் உள்ளே நுழைய முயன்றனர்.

போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், சிறுமியின் உறவினர்கள், போலீசாரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.நிலைமை மோசமடைவதை உணர்ந்த, பெங்களூரு வடக்கு மண்டல டி.சி.பி., தர்மேந்திரகுமார் மீனா, ஹெப்பால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பைரதி சுரேஷ், போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் என்று உறவினர்களை சமாதானப்படுத்தினர்.இது குறித்து, டி.சி.பி., தர்மேந்திரகுமார் மீனா கூறியதாவது:குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நபரையும் கைது செய்துள்ளோம். சிறுமியின் மருத்துவ அறிக்கை வந்த பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.மக்கள் பாதுகாப்புக்கு எப்போதும் தயாராக உள்ளோம்.

எந்த தொந்தரவு ஏற்பட்டாலும், '112' என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.குற்றவாளிகளுடன் போலீசாருக்கும் தொடர்பு இருந்தால், அவர்கள் மீதும் புகார் அளிக்கலாம். அத்தகைய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து போராட்டம் கைவிட்டு, வீடு திரும்பினர். இதன் பின்னரே நிலைமை கட்டுக்குள் வந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X