சட்டசபையில் காரசார விவாதம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சட்டசபையில் காரசார விவாதம்

Added : செப் 21, 2021
Share
பெங்களூரு : இட்லி, தோசை, வடை விலை உயர்வு குறித்து, கர்நாடக சட்டசபையில் ருசிகர, காரசார விவாதம் நடந்தது.அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டசபையில் நேற்று பதிலளிக்கும் போது நடந்த விவாதம்:முதல்வர் பசவராஜ் பொம்மை: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சரியாக பேசி கொண்டிருந்தார். ஆனால் அவரது

பெங்களூரு : இட்லி, தோசை, வடை விலை உயர்வு குறித்து, கர்நாடக சட்டசபையில் ருசிகர, காரசார விவாதம் நடந்தது.அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு குறித்து, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு தரப்பில் முதல்வர் பசவராஜ் பொம்மை, சட்டசபையில் நேற்று பதிலளிக்கும் போது நடந்த விவாதம்:முதல்வர் பசவராஜ் பொம்மை: எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா சரியாக பேசி கொண்டிருந்தார்.

ஆனால் அவரது பின்னால் இருப்பவர்கள் தவறான தகவல் சொல்லி கொடுத்து விட்டனர். தயவுசெய்து உங்கள் ஆதரவாளர்கள் வழங்கும் தகவலை பரிசீலித்து பேசுங்கள். ஜனார்த்தன ஓட்டலில், 2 இட்லியின் விலை எவ்வளவு தெரியுமா?சித்தராமையா: ஜனார்த்தன ஓட்டல் குறித்து தோசை குறித்து தான் நான் பேசினேன்.பசவராஜ் பொம்மை: தோசை விலை குறித்தும் விரிவாக சொல்கிறேன்.சித்தராமையா: ஜனார்த்தன ஓட்டல் தோசையை உதாரணத்துக்கு தான் குறிப்பிட்டேன். எண்ணெய் விலை எவ்வளவு உயர்ந்துள்ளது; இரும்பு விலை எவ்வளவு உயர்ந்துள்ளது என்பதை விரிவாக சொல்லவும். வெறும், இட்லி, தோசை விலை உயர்வு சொன்னால் போதுமா?பசவராஜ் பொம்மை: ஒரு முதல்வராக இட்லி, தோசை விலை உயர்வு குறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதை குறிப்பிட்டது எதிர்க்கட்சி தலைவர். ஏனென்றால் சாமானிய மக்கள் அதிகளவில் சாப்பிடுவதால், அதை குறிப்பிட்டுள்ளீர்கள். எதிர்க்கட்சி தலைவராக அதை தான் பேச வேண்டும்; பேசியதற்கு மகிழ்ச்சி.அப்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கை தட்டி ஆரவாரம் செய்தனர்.பசவராஜ் பொம்மை: நானும் அதே ஜனார்த்தன ஓட்டலில் தான் சாப்பிடுகிறேன். என் சொந்த தகவலுக்கு விலை நிலவரம் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா. இட்லி, தோசை விலை குறித்து பேசியதால், பதிலளிக்க வேண்டுமல்லவா. இல்லை என்றால் தவறாகிவிடும்.நாம் ஓட்டலுக்கு செல்லும் போது வெறும் தோசை மட்டுமே சாப்பிடுவதில்லை;

இட்லியும் சாப்பிடுகிறோம். சித்தராமையா முதல்வராக இருந்த போது, 2017ல், இரண்டு இட்லிகளின் விலை, 35 ரூபாயாக இருந்தது. 2021ல், 38 ரூபாயாக உயர்ந்துள்ளது.வடை விலை உயர்வு தகவல் உள்ளது. அதை குறிப்பிட விரும்பவில்லை. உங்களுக்கு மசால் தோசை தான் பிடிக்கும்.சித்தராமையா: விவசாய போராட்டம் மூலம் உயர்ந்தவர் நீங்கள். கேள்விக்கு தொடர்புள்ள விஷயத்தை மட்டுமே பேசுங்கள். இப்படி எல்லாம் ஒரு முதல்வர் இலகுவாக பேசுவது சரியில்லை.அப்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும் மசால் தோசை, எண்ணெய் மற்றும் இரும்பு விலை உயர்வு குறித்து பேசுங்கள் என்று வலியுறுத்தினர்.பசவராஜ் பொம்மை: மசால் தோசை விலை, 2019ல் 80 ரூபாய்; 2020ல் 80 ரூபாய், 2021ல் 90 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது வழக்கமான உயர்வு தான். எனவே பழைய விலை பட்டியல் பார்க்கும் போது, எங்கள் அரசு வந்த பின் தான், விலை உயர்ந்தது என்று கூறுவது சரியில்லை. ஏதோ உங்கள் ஆட்சியின் போது, 40 ரூபாயாக இருந்தும், எங்கள் ஆட்சியில், 80 ரூபாயாக உயர்ந்திருந்தால் உங்கள் வாதம் சரி.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X