பொது செய்தி

இந்தியா

ஒலி மாசு ஏற்படுத்துவோர் மீது நடவடிக்கை; அமைச்சர் ஆனந்த் சிங்

Added : செப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''மசூதிகள் உட்பட விதிமுறையை மீறி ஒலி மாசு ஏற்படுத்துவோர் மீது சுற்றுச்சூழல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சட்ட மேலவையில் தெரிவித்தார்.கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., -- நாராயணசாமி: மசூதிகளில் ஒலிபெருக்கிகளால், ஒலி மாசு ஏற்படுகிறது. சிங்கப்பூரில் முதன் முறையாக, ஒலி

பெங்களூரு : ''மசூதிகள் உட்பட விதிமுறையை மீறி ஒலி மாசு ஏற்படுத்துவோர் மீது சுற்றுச்சூழல் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சட்ட மேலவையில் தெரிவித்தார்.

கர்நாடக சட்டமேலவை கேள்வி நேரத்தில் நேற்று நடந்த விவாதம்:பா.ஜ., -- நாராயணசாமி: மசூதிகளில் ஒலிபெருக்கிகளால், ஒலி மாசு ஏற்படுகிறது. சிங்கப்பூரில் முதன் முறையாக, ஒலி பெருக்கி பொருத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் உள்ளது. இந்தோனேஷியா உட்பட பல நாடுகளில் ஒலி பெருக்கி பொருத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் விதிமுறைப்படி இரவு 10:00 மணிக்கு பின், ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது. 22 இடங்களில் ஒலி மாசு தடுக்கப்பட்டுஉள்ளது.மற்றபடி, ஆறு மசூதிகளுக்கு கடிதம் எழுதியுள்ளனர்; இன்னும் பதில் வரவில்லை. துறை என்ன செய்கிறது?அமைச்சர் ஆனந்த் சிங்: காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை மட்டும் ஒலி பெருக்கி பயன்படுத்தலாம். ஆனால், ஒலி மாசு கட்டுக்குள் இருக்க வேண்டும் என, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.சுற்றுச்சூழல் துறையால் மட்டுமே, ஒலிமாசுவை கட்டுப்படுத்த முடியாது. போலீஸ் துறையின் எஸ்.பி., - டி.எஸ்.பி., தலைமையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து உள்துறைக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது; இதுவரை பதில் வரவில்லை. உள்துறை நடவடிக்கை எடுக்காவிட்டாலும், சுற்றுச்சூழல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கோவில்கள், மசூதிகளில், ஒலி பெருக்கி பயன்படுத்த உள்துறையிடம் அனுமதி பெற வேண்டும். எங்களின் துறை, ஒலி மாசு அளவை மட்டுமே ஆய்வு செய்ய முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X