பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கர்நாடக அரசுக்கு சீத்தராமையா கேள்வி

Added : செப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : ''தமிழக முதல்வர் ஸ்டாலின், பெட்ரோல், டீசல் மீதான வரியில், மூன்று ரூபாய் குறைத்துள்ளார். தமிழக அரசால் விலை குறைக்க முடியும் என்றால், கர்நாடக அரசால் ஏன் முடியவில்லை?'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார், கடந்த வாரம் மாட்டு வண்டிகளில் விதான் சவுதாவுக்கு வந்தனர்.அது

பெங்களூரு : ''தமிழக முதல்வர் ஸ்டாலின், பெட்ரோல், டீசல் மீதான வரியில், மூன்று ரூபாய் குறைத்துள்ளார். தமிழக அரசால் விலை குறைக்க முடியும் என்றால், கர்நாடக அரசால் ஏன் முடியவில்லை?'' என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பினார்.

பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார், கடந்த வாரம் மாட்டு வண்டிகளில் விதான் சவுதாவுக்கு வந்தனர்.அது போல, பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் சைக்கிள்கள் மூலம் நேற்று, விதான் சவுதாவுக்கு வந்தனர்.வழி நெடுகிலும், மத்திய, மாநில பா.ஜ., அரசையும், பிரதமர் நரேந்திர மோடியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.பின், விதான் சவுதாவில் சித்தராமையா கூறியதாவது:அரசு வழக்குப்பதிவு செய்யும் என்பதால், விலை உயர்வு குறித்து மக்கள் பேசமால் சும்மா உள்ளனர். அடுத்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.,வை காக்க யாராலும் முடியாது. எடியூரப்பா போன்று, 100 பேர் வந்தாலும் முடியாது.மோடி பிரதமரான பின், அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. விலை உயர்வால் மக்களுக்கு பண சுமை ஏற்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு குறைந்தாலும், நாட்டில் ஏன் விலை குறைக்கவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்ததன் மூலம், நாட்டின் மொத்த கடனையும், ஒரே ஆண்டில் தீர்த்திருக்கலாமே.தமிழக முதல்வர் ஸ்டாலின், பெட்ரோல், டீசல் மீதான வரியில், மூன்று ரூபாய் குறைத்துள்ளார். தமிழக அரசால் விலை குறைக்க முடியும் என்றால், கர்நாடக அரசால் ஏன் முடியவில்லை?இந்த விலை குறைத்தால், இரும்பு, சிமென்ட், பஸ் கட்டணம், அத்தியாவசிய பொருட்களின் விலை தானாக குறையும். ஜி.எஸ்.டி. முறை வந்த பின், மாநில அரசு, மத்திய அரசிடம் கை ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X