பொது செய்தி

இந்தியா

'பப்ளிசிட்டி'க்காக செய்து விட்டோம்:ஹிந்து வாலிபரை தாக்கியவர்கள் கதறல்

Added : செப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஹிந்து வாலிபரையும், முஸ்லிம் பெண்ணையும் தாக்கினோம்' என, கைது செய்யப்பட்ட முஸ்லிம் வாலிபர்கள், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.பெங்களூரு தனியார் வங்கியில் பணியாற்றும் முஸ்லிம் பெண்ணுக்கு, 'சிறந்த ஊழியர்' என்ற விருதும், 'லேப்-டாப்' கம்ப்யூட்டரும் பரிசாக கிடைத்தன. இதனால், கடந்த 18 அன்று பணி முடிய

பெங்களூரு : பப்ளிசிட்டி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஹிந்து வாலிபரையும், முஸ்லிம் பெண்ணையும் தாக்கினோம்' என, கைது செய்யப்பட்ட முஸ்லிம் வாலிபர்கள், போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பெங்களூரு தனியார் வங்கியில் பணியாற்றும் முஸ்லிம் பெண்ணுக்கு, 'சிறந்த ஊழியர்' என்ற விருதும், 'லேப்-டாப்' கம்ப்யூட்டரும் பரிசாக கிடைத்தன. இதனால், கடந்த 18 அன்று பணி முடிய தாமதமானது.எனவே, சக ஊழியரான மகேஷ், 35, என்பவருடன் அவரின் இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த தகவலை அந்த பெண், தன் கணவருக்கும் தெரிவித்திருந்தார்.பெங்களூரு டெய்ரி சர்க்கிள் அருகில் சென்ற போது, இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் வழிமறித்தனர். அந்த பெண்ணிடம், 'ஹிந்து நபருடன் ஏன் செல்கிறாய். உன்னை போன்றவர்களால் தான் முஸ்லிம் சமுதாயத்துக்கு அவமரியாதை ஏற்படுகிறது' என கூறி கண்டனம் தெரிவித்தனர்; மகேஷ் மீது தாக்குதல் நடத்தினர்.இது குறித்த 'வீடியோ'வை, தாக்குதல் நடத்திய சோஹல் என்பவர், தன் முகநுால் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்ததை தொடர்ந்து, வீடியோவை நீக்கி விட்டார்.

அதற்குள் வேகமாக பரவியதால், சுத்தகுண்டே போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக, சோஹல் உட்பட இரண்டு பேரை கைது செய்து போலீசார் விசாரித்தனர்.அப்போது அவர்கள், 'மதம் சம்பந்தமான பிரச்னையை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டால், பெரிய அளவில் பப்ளிசிட்டி கிடைக்கும்; புகழ் தேடி வரும் என்ற ஆசையில் இதை செய்து விட்டோம்' என கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். எனினும், அவர்களுக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருக்கிறதா என போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X