சாலை அமைக்காததால் அல்லாடும் பொதுமக்கள்

Added : செப் 21, 2021 | |
Advertisement
பம்மல் நகராட்சிக்குட்பட்ட, 20வது வார்டு, சென்ட்ரல் பாங்க் காலனி, நவமணி இரண்டாவது குறுக்கு தெரு உள்ளிட்ட சில தெருக்களில், சாலை போடுவதற்காக ஜல்லி கொட்டினர். ஜல்லியை சமன்படுத்தியதோடு, அப்படியே விட்டு விட்டனர். இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், சாலை போடாததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.ஜல்லி கற்கள் கூர்மையாக இருப்பதால், இருசக்கர வாகனங்களும்,

பம்மல் நகராட்சிக்குட்பட்ட, 20வது வார்டு, சென்ட்ரல் பாங்க் காலனி, நவமணி இரண்டாவது குறுக்கு தெரு உள்ளிட்ட சில தெருக்களில், சாலை போடுவதற்காக ஜல்லி கொட்டினர்.

ஜல்லியை சமன்படுத்தியதோடு, அப்படியே விட்டு விட்டனர். இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகியும், சாலை போடாததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.ஜல்லி கற்கள் கூர்மையாக இருப்பதால், இருசக்கர வாகனங்களும், சைக்கிள்களும் பஞ்சராகி விடுகின்றன. நடந்து செல்பவர்கள் கூர்மையான கற்கள் குத்தி காயமடைகின்றனர். குறிப்பாக, முதியோர், சிறுவர்கள் தெருக்களில் நடந்து செல்வது பெரும் சவாலாக உள்ளது. இப்பிரச்னையை நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி, சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X