பொது செய்தி

இந்தியா

பொது நுழைவுத் தேர்வு முடிவுகள் அறிவிப்பு

Added : செப் 21, 2021
Share
Advertisement
பெங்களூரு : பொறியியல், கால்நடை மருத்துவம் உட்பட பல உயர் படிப்புகளுக்கான சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு முடிவுகளை, உயர் கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா நேற்று அறிவித்தார். மைசூரு மாணவர் மேகன், அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கர்நாடகாவில் பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு முடித்தவர்கள், பொறியியல், பி.எஸ்சி., விவசாயம், கால்நடை மருத்துவம், யோகா,

பெங்களூரு : பொறியியல், கால்நடை மருத்துவம் உட்பட பல உயர் படிப்புகளுக்கான சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு முடிவுகளை, உயர் கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா நேற்று அறிவித்தார்.

மைசூரு மாணவர் மேகன், அனைத்து பிரிவுகளிலும் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.கர்நாடகாவில் பி.யூ.சி., இரண்டாம் ஆண்டு முடித்தவர்கள், பொறியியல், பி.எஸ்சி., விவசாயம், கால்நடை மருத்துவம், யோகா, பி.பார்ம்., - டி.பார்ம்., உட்பட பல உயர் படிப்புகளில் சேருவதற்கு, சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.இந்தாண்டு கொரோனாவால், ஆகஸ்ட், 28 முதல், 30 வரை அந்த தேர்வு நடந்தது. 2 லட்சத்து, 1,834 மாணவர்கள் விண்ணப்பித்தனர்; ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 447 மாணவர்கள் தேர்வு எழுதினர்.இதற்கான முடிவுகளை, கர்நாடக உயர் கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா பெங்களூரில் நேற்று வெளியிட்டார்.அவர் கூறியதாவது:பி.இ., பொறியியல் பிரிவுக்கு, ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 231 மாணவர்கள்; யோகா பிரிவுக்கு, ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 910 மாணவர்கள்; கால்நடை மருத்துவ பிரிவுக்கு, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 518 மாணவர்கள்.மேலும், டி.பார்ம்., பிரிவுக்கு, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 638 மாணவர்கள்; பி.பார்ம்., பிரிவுக்கு, ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 638 மாணவர்களும் தகுதி பெற்றுள்ளனர்.அனைத்து பிரிவுகளிலும், மைசூரு, பிரமதி ஹில் வியூ அகாடமி பி.யூ.சி., மாணவர் மேகன், மாநில அளவில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.இயற்பியலில், 26 மாணவர்கள், 55 மதிப்பெண்களுக்கு அதிகமாகவும், ரசாயன பிரிவில் மூன்று, கணித பிரிவில் ஆறு, உயிரியல் பிரிவில் 50 மாணவர்களும் 60க்கு, 60 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துஉள்ளனர்.இம்முறை, பதில்கள் குழப்பத்தால், 6 மதிப்பெண்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. வெவ்வேறு காரணங்களால், 7,000 மாணவர்களின் ரேங்க் விபரம் அறிவிக்கப்படவில்லை.மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்த மாநிலம் முழுதும் ஆவணங்கள் பரிசீலனை நடத்த, மையங்கள் திறக்கப்படும். வரும் 30லிருந்து ஆன்லைன் மூலம் ஆவணங்கள் பரிசீலனை துவங்கும்.அதன் பின், கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். http://kea.kar.nic.in, என்ற இணைய தளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.''20.09.2021 / செய்தி: அர்வின்குமார் 8:40 MD: 8:4221_DMR_0017சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு முடிவுகளை, உயர் கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா நேற்று வெளியிட்டார். மாநில தேர்வுகள் ஆணைய செயல் இயக்குனர் ரம்யா பெற்றுக் கொண்டார். இடம்: பெங்களூரு.--------------------------------------------மைசூரு மாணவர் 'டாப்!'சி.இ.டி., பொது நுழைவு தேர்வு முடிவுகள் அறிவிப்புஇன்ஜி., படிப்புக்கு, 1.83 லட்சம் மாணவர்கள் தகுதி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X