பொது செய்தி

தமிழ்நாடு

கொலு பொம்மை பூம்புகாரில் கண்காட்சி

Added : செப் 21, 2021
Share
Advertisement
சென்னை : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி நேற்று துவங்கியது.தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம், கைவினைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது.இதற்காக நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி பண்டிகையை
 கொலு பொம்மை பூம்புகாரில் கண்காட்சி

சென்னை : நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி நேற்று துவங்கியது.

தமிழ்நாடு கைத்திறன் தொழில் வளர்ச்சிக் கழகம் எனும் பூம்புகார் நிறுவனம், கைவினைஞர்களின் உற்பத்தியை சந்தைப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி வருகிறது.இதற்காக நாடு முழுவதும் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சென்னை, அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி நேற்று துவங்கியது.ஊரக தொழில் துறை அமைச்சர் அன்பரசன், கண்காட்சியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், துறையின் முதன்மை செயலர் அபூர்வா, மேலாண் இயக்குனர் ஷோபனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கண்காட்சியில் காகிதக் கூழ், பளிங்குத்துாள், சந்தன, நுாக்க, வெண் மரங்களில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள், தசாவதாரம், ராமாயணம், கார்த்திகை பெண்கள், மாயா பஜார், திருமண விருந்து போன்ற பொம்மை 'செட்'கள் பார்வையாளர்களை கவரும் வகையில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியில், 50 ரூபாய் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரையிலான பொம்மைகள் இடம் பெற்றுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு, 10 சதவீத சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.அக்., 20ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சிக்கு, பார்வையாளர்கள் தினமும் காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை அனுமதிக்கப்படுவர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X