பொது செய்தி

இந்தியா

'ரெய்டு'க்கு காலம் பதில் சொல்லும் பாலிவுட் நடிகர் சோனு சூட் விரக்தி -

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
மும்பை-''நம் தரப்பு நியாயத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துரைக்க வேண்டும் என அவசியம் இல்லை. காலம் அதற்கு பதில் சொல்லும்,'' என, வருமான வரித் துறை சோதனை குறித்து, பாலிவுட் நடிகர் சோனு சூட் கூறினார்.மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், 48, ஊரடங்கின்போது, சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி,

மும்பை-''நம் தரப்பு நியாயத்தை எல்லா நேரங்களிலும் எடுத்துரைக்க வேண்டும் என அவசியம் இல்லை. காலம் அதற்கு பதில் சொல்லும்,'' என, வருமான வரித் துறை சோதனை குறித்து, பாலிவுட் நடிகர் சோனு சூட் கூறினார்.



latest tamil news


மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வரும் பாலிவுட் நடிகர் சோனு சூட், 48, ஊரடங்கின்போது, சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.இந்நிலையில் சமீபத்தில் மும்பையில் உள்ள சோனு சூட்டிற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து நான்கு நாட்கள் நடந்த அந்த சோதனையில் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக அவர் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இவர் துவங்கிய தொண்டு நிறுவனம் சார்பில் 18 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. இதில் நிவாரணப் பணிகளுக்காக 1.9 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதும்; வங்கிக் கணக்கில் மீதமுள்ள 17 கோடி ரூபாய் அப்படியே இருப்பதும் தெரியவந்தது.


latest tamil news


இது குறித்து சோனு சூட் நேற்று கூறியதாவது:என் அறக்கட்டளையிடம் உள்ள ஒவ்வொரு ரூபாயும், ஒரு விலை மதிப்பற்ற உயிரை காப்பாற்றுவதற்காக காத்திருக்கிறது. தேவைப்படும் மக்களுக்கு அது சென்றடையும்.கடந்த சில நாட்களாக என்னை வருமான வரித் துறையில் இருந்து சந்திக்க வந்த விருந்தினர்களுடன் 'பிஸி'யாக இருந்ததால், என்னால் அப்போது பொது சேவையில் ஈடுபட முடியவில்லை. இப்போது மீண்டும் வந்துவிட்டேன்.எல்லா நேரங்களிலும் நம் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை. காலம் அதற்கு பதில் சொல்லும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
23-செப்-202120:46:36 IST Report Abuse
jayvee இது பீஜேபியின் தவறா அல்லது சோனு சூட்டின் தவறா என்பதை காலம் சொல்லும்..
Rate this:
Cancel
21-செப்-202114:47:21 IST Report Abuse
ராஜா சோனு சூட் அவர்களின் ஆதரவாளர்களில் நானும் ஒருவன். வருமான வரித்துறை கேட்கும் ஆதாரங்களை கொடுத்து வரி ஏய்ப்பு செய்யவில்லை என்று நிரூபிப்பதை விட்டுவிட்டு காலத்தை பதில் சொல்லச்சொல்வது ஒரு அரசியல் சாயம் பூசப்பட்ட செயல்.
Rate this:
Cancel
R S BALA - CHENNAI,இந்தியா
21-செப்-202112:30:53 IST Report Abuse
R S BALA என்னப்பா இது முன்னெல்லாம் வில்லனா நடிச்சு வந்த சொந்த காசுல செலவு பண்ணுதா சொன்னிங்கோ .. இப்போ தொண்டு நிறுவனம் அப்படின்னு சொல்றிங்கோ .. அப்போவே சொல்லாம .. மொத்த கதையை மாத்திட்டிங்களப்பா ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X