சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மோபைல் போன் பறிப்பு; போலீசார் தேடுதல் வேட்டை

Added : செப் 21, 2021
Share
Advertisement
சென்னை : இளம்பெண் உட்பட நான்கு பேரிடம் மொபைல் போன் பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் விரோனிக்கா, 25. நேற்று முன்தினம் இரவு, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் அருகே நின்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்மநபர்கள் இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர்.இது குறித்து, பட்டினப்பாக்கம்

சென்னை : இளம்பெண் உட்பட நான்கு பேரிடம் மொபைல் போன் பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பட்டினப்பாக்கம், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் விரோனிக்கா, 25. நேற்று முன்தினம் இரவு, பட்டினப்பாக்கம் பஸ் நிலையம் அருகே நின்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் 'ஹெல்மெட்' அணிந்து வந்த மர்மநபர்கள் இருவர், அவரது மொபைல் போனை பறித்து தப்பினர்.இது குறித்து, பட்டினப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.மயிலாப்பூர்: மயிலாப்பூர், பாபநாசம் சாலையைச் சேர்ந்தவர் பாஸ்கர், 45. இவரிடமிருந்து, 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மொபைல் போனை, மர்மநபர்கள் பறித்துச் சென்றனர்.  மயிலாப்பூர் பிடாரியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அப்ரோஸ் பாத்திமா, 17. இவர் நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர் கோல விழியம்மன் கோவில் அருகே நடந்து சென்றார்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.கோயம்பேடு: தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுராமன், 27. இவர், டில்லியில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் பயிற்சிக்காக செல்ல, நேற்று காலை கோயம்பேடு பஸ் நிலையம் வந்தார்.அங்கிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் செல்ல, தடம் எண்: 15பி மாநகர பேருந்தில் ஏறினார். அப்போது, தன் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை, மர்ம நபர் திருடி சென்றது தெரிய வந்தது. கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X