பொது செய்தி

இந்தியா

மக்கள் பாதுகாப்புக்காகவே கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது: கவர்னர் தமிழிசை

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை'' என கவர்னர் தமிழிசை கூறினார்.புதுச்சேரியை நுாறு சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, வீடு வீடாக கணக்கெடுத்து தடுப்பூசி போடும் பணியை அரசு துவக்கியுள்ளது. இப்பணியை, கருவடிக்குப்பம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில்
 மக்கள் பாதுகாப்புக்காகவே கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது: கவர்னர் தமிழிசை

புதுச்சேரி : ''புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்படவில்லை'' என கவர்னர் தமிழிசை கூறினார்.புதுச்சேரியை நுாறு சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்றுவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, வீடு வீடாக கணக்கெடுத்து தடுப்பூசி போடும் பணியை அரசு துவக்கியுள்ளது. இப்பணியை, கருவடிக்குப்பம் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதிகளில் கவர்னர் தமிழிசை நேற்று ஆய்வு செய்தார்.வீடுகளுக்குச் சென்று, தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.பின் கவர்னர் தமிழிசை கூறியதாவது:ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளை சந்தித்து குறைகளை கேட்டேன். சில குறைபாடுகளைக் கூறி உள்ளனர். அவை சரிசெய்யப்படும்.ஸ்கேன் வசதி, காலியாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற பணியிடங்களை உடனே நிரப்ப அரசு முயற்சி எடுக்கும்.ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த நோயாளிகள் எந்தவித தடையும் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு அனைத்து துறைகளும் மேம்படுத்தப்படும்.எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பகுதியில் தடுப்பூசி முகாம்களை முன்னெடுத்து நடத்த வேண்டும். விடுபட்ட அனைவரும் பத்து நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள செய்ய வேண்டும்.மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் அரசு சில விஷயங்களை கட்டாயப்படுத்துகிறது. மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால், நோய்வாய்ப்பட்டு பின் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். புதுச்சேரியில் கொரோனா பரிசோதனை குறைக்கப்படவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X