கடலுார் : கடலுார் மாவட்டத்தில் ரேஷன் கடைகளுக்கு, தெலுங்கானாவில் இருந்து, 1400 டன் அரிசி ரயில் மூலம் வந்தது.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி இலவசமாக மத்திய அரசு வழங்கி வருகிறது.
அதற்காக, மத்திய அரசு தொகுப்பு மூலம் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடலுார் மாவட்டத்திற்கு அரிசி வரவழைக்கப்படுகிறது. நேற்று 23 ரயில் பெட்டிகள் மூலம் 1400 டன் அரிசி கடலுார் வந்தது. கடலுார் துறைமுக ரயில் நிலையத்திற்கு வந்த அரிசி, லாரிகள் மூலம் செம்மங்குப்பத்தில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பினர். இது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பொது மக்களுக்கு வழங்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement