பொது செய்தி

இந்தியா

உமரங்காட்டு தாங்கல் ஏரி துார் வாரும் பணி துவக்கம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
பாகூர் : கொரவள்ளிமேடு உமரங்காட்டு தாங்கல் ஏரி, துார் வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பாகூர் தொகுதி கொரவள்ளிமேடு கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட உமரங்காட்டு தாங்கல் ஏரியை, புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டி, ரூ.10 லட்சம் செலவில், துார் வார முன்வந்துள்ளது.இப்பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த ஏரி

பாகூர் : கொரவள்ளிமேடு உமரங்காட்டு தாங்கல் ஏரி, துார் வாரும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.பாகூர் தொகுதி கொரவள்ளிமேடு கிராமத்தில் உள்ள 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட உமரங்காட்டு தாங்கல் ஏரியை, புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டி, ரூ.10 லட்சம் செலவில், துார் வார முன்வந்துள்ளது.இப்பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்த ஏரி துார்வாரப்படுவதன் மூலமாக மழை நீரை சேமிப்பது மட்டுமின்றி, நிலத்தடி நீரில் உப்பு நீர் உட்புகாமல் தடுக்கப்படும்.நிகழ்ச்சியில், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஷாலினி அரவிந்தன், ஏரி சங்க தலைவர் புருஷோத்தமன், கமலக்கண்ணன், பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பு தலைவர் சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X