பொது செய்தி

இந்தியா

மத்திய அரசை கண்டித்து காரைக்காலில் ஆர்ப்பாட்டம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
காரைக்கால் : காரைக்காலில் தி.மு.க., காங்., கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, காரைக்கால் மாதா கோவில் வீதியில், நாஜிம் எம்.எல்.ஏ., தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய

காரைக்கால் : காரைக்காலில் தி.மு.க., காங்., கட்சிகள் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய பா.ஜ., அரசை கண்டித்து, காரைக்கால் மாதா கோவில் வீதியில், நாஜிம் எம்.எல்.ஏ., தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.இதில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பெட்ரோலிய பொருட்களின் விலையை மத்திய அரசு குறைக்க வேண்டும். மின்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.இதேபோல, காங்., சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து, மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாநில துணைத்தலைவர் பஷீர்,மாவட்ட பொதுச் செயலாளர் சிவகணேஷ் உள்ளிட்ட காங்., பிரமுகர்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X