வங்கி கடன் தள்ளுபடி கோரி மாதர் சம்மேளனம் ஆர்ப்பாட்டம்

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கி மூலம் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக்கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ராஜா தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் தசரதா தலைமை தாங்கினார். பொருளாளர் லதா, துணைத் தலைவர் ஆனந்தவள்ளி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலர் சரளா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.கொரோனா பேரிடரின்

புதுச்சேரி : மகளிர் சுய உதவிக் குழுக்கள் வங்கி மூலம் பெற்ற கடனை தள்ளுபடி செய்யக்கோரி, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ராஜா தியேட்டர் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர் தசரதா தலைமை தாங்கினார். பொருளாளர் லதா, துணைத் தலைவர் ஆனந்தவள்ளி முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலர் சரளா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.கொரோனா பேரிடரின் போது பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டனர். எனவே சுய உதவிக்குழுக்கள் வங்கிகள் மூலம் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.மத்திய அரசின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் அனைவரும் பயன்பெற நடவடிக்கை எடுக்கவேண்டும். நியாய விலைகடைகளில் அனைத்து பொருட்களும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X