பொது செய்தி

இந்தியா

விவசாயிகளுக்கு இடுபொருள் அமைச்சர் வழங்கினார்

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வேளாண் துறை சார்பில் இடுபொருட்களை, விவசாயிகளுக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்.வேளாண் துறை மூலம் விவசாயிகளை வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பது வழக்கம்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, விவசாயிகளை வெளி மாநிலத்திற்கு அழைத்து செல்லு தல், கல்வி சுற்றுலா நிறுத்தப்பட்டது.இதற்கான நிதியில் விவசாயிகளுக்கு

புதுச்சேரி : வேளாண் துறை சார்பில் இடுபொருட்களை, விவசாயிகளுக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார்.வேளாண் துறை மூலம் விவசாயிகளை வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிப்பது வழக்கம்.கொரோனா அச்சுறுத்தல்

காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக, விவசாயிகளை வெளி மாநிலத்திற்கு அழைத்து செல்லு தல், கல்வி சுற்றுலா நிறுத்தப்பட்டது.இதற்கான நிதியில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு, காய்கறி நுண்ணுாட்ட கலவை ஊக்கிகள், மண் புழு உரம் தயாரிப்பு படுகை, காய்கறி வைக்கும் பிளாஸ்டிக் பெட்டிகள் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.இவற்றை விவசாயிகளுக்கு அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வழங்கினார். பட்ஜெட்டில் அறிவித்தபடி விவசாயிகளுக்கு அசோலா பெட் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X