பொது செய்தி

இந்தியா

மாமூல் கேட்டு பேக்கரி சூறை ரவுடி எலிகார்த்திக் கைது

Added : செப் 21, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுச்சேரி : மாமூல் கேட்டு பேக்கரி கடையை சூறையாடிய ரவுடி எலிகார்த்திக் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.தவளகுப்பம், சீனிவாசா டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்; புதுச்சேரி, காந்தி வீதியில் பேக்கரி நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, வாழைக்குளம் அக்காசாமி மடம் வீதியை சேர்ந்த ரவுடி கார்த்திக் (எ) எலிகார்த்திக், 30; வாணரப்பேட்டை ராசு உடையார் தோட்டம்
 மாமூல் கேட்டு பேக்கரி சூறை  ரவுடி எலிகார்த்திக் கைது

புதுச்சேரி : மாமூல் கேட்டு பேக்கரி கடையை சூறையாடிய ரவுடி எலிகார்த்திக் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.தவளகுப்பம், சீனிவாசா டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்; புதுச்சேரி, காந்தி வீதியில் பேக்கரி நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை, வாழைக்குளம் அக்காசாமி மடம் வீதியை சேர்ந்த ரவுடி கார்த்திக் (எ) எலிகார்த்திக், 30; வாணரப்பேட்டை ராசு உடையார் தோட்டம் மதி (எ) மணிகண்டன், 32; ஆகியோர் இந்த பேக்கரிக்கு வந்தனர்.மாமூல் கேட்டு, ஊழியர் சிவா, உரிமையாளர் சண்முகசுந்தரம் ஆகியோரை மிரட்டினர்.கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர். மாமூல் தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்தனர். இது குறித்து சண்முகசுந்தரம் பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார்.இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், ரவுடி எலி கார்த்திக், மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர். இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
25-செப்-202115:57:26 IST Report Abuse
தமிழவேல் எதுக்கு முகத்தை மூடனும் ? மூர்கன், திராவிஷன், டுமீளன்ஸ் .......... நம்ப மாட்டானுவோலே...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
23-செப்-202114:28:39 IST Report Abuse
jayvee இவன் 'பெருச்சாளி' கார்த்திக்காக மாறும் முன், போலீசார் இவனை 'நல்ல' முறையில் 'கவனித்து' நிறுத்தவேண்டும்
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
22-செப்-202106:25:24 IST Report Abuse
 Muruga Vel எலிகார்த்திக் மணிகண்டன் ரெண்டுபேரும் ரவுடியா இருந்தாலும் முக கவசம் அணிந்திருக்கிறார்கள் ..போலீஸ் கவனக்குறைவா இருக்காங்க ..
Rate this:
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
24-செப்-202120:30:33 IST Report Abuse
Thirumuruganஹா...ஹா...ஹா...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X