ஆற்றில் மூழ்கி மகன் பலி அதிர்ச்சியில் தாய் சாவு

Added : செப் 21, 2021
Share
Advertisement
அரியாங்குப்பம் : ஆற்றில் மூழ்கி மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.புதுச்சேரி, மேட்டுப்பாளையம் சண்முகாபுரத்தை சேர்ந்தவர் வேலு. லாஸ்பேட்டையில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஜீவா, 20; மேட்டுப்பாளையத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்ட ரில் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் சேர்ந்து

அரியாங்குப்பம் : ஆற்றில் மூழ்கி மகன் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.புதுச்சேரி, மேட்டுப்பாளையம் சண்முகாபுரத்தை சேர்ந்தவர் வேலு. லாஸ்பேட்டையில் சைக்கிள் கடை நடத்தி வருகிறார்.

இவரது மகன் ஜீவா, 20; மேட்டுப்பாளையத்தில் உள்ள கார் சர்வீஸ் சென்ட ரில் வேலை செய்து வந்தார்.இவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் சேர்ந்து நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் மீன் பிடித்தார்.அப்போது ஜீவா ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி மாயமானார். தகவலறிந்த தவளக்குப்பம் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், கடலோர காவல் படையினர் உதவியுடன் ஜீவாவை தேடியும் கிடைக்கவில்லை.நேற்று காலை 8.௦௦ மணியளவில் ஜீவாவின் உடல் கரை ஒதுங்கியது. போலீசார், உடலை மீட்டு கதிர்காமம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்மகன் ஆற்றில் மூழ்கி இறந்த செய்தியை கேட்ட, அவரது தாய் லட்சுமி,46;க்கு, அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ஒரே குடும்பத்தில் தாய், மகன் இறந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X