ஐ.ஆர்.பி.என்., காவலரை தாக்கி மிரட்டிய மூவர் மீது வழக்கு பதிவு| Dinamalar

ஐ.ஆர்.பி.என்., காவலரை தாக்கி மிரட்டிய மூவர் மீது வழக்கு பதிவு

Added : செப் 21, 2021
Share
புதுச்சேரி : குருமாம்பட்டு அருகே, ஐ.ஆர்.பி.என். காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுார், பம்ப் ஹவுஸ் வீதியைச் சேர்ந்தவர் சுந்தர், 40; ஐ.ஆர்.பி.என். காவலராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஊசுட்டேரிக்கு காரில் சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார்.

புதுச்சேரி : குருமாம்பட்டு அருகே, ஐ.ஆர்.பி.என். காவலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த மூவர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

முத்திரையர்பாளையம், காந்தி திருநல்லுார், பம்ப் ஹவுஸ் வீதியைச் சேர்ந்தவர் சுந்தர், 40; ஐ.ஆர்.பி.என். காவலராக பணியாற்றி வருகிறார்.நேற்று முன்தினம் குடும்பத்துடன் ஊசுட்டேரிக்கு காரில் சென்று, மாலை 6:30 மணிக்கு வீடு திரும்பினார். குருமாம்பட்டு ஏ.எப்.டி. மில் அருகே வந்தபோது, எதிரில் மூன்று பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் கார் மீது மோதுவது போல் வந்தது.காரை நிறுத்தி, ஏன் மோதுவதுபோல் வருகிறீர்கள் என சுந்தர் கேட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மூவரும்,

சுந்தரை ஆபாசமாக திட்டி, தாக்கினர்.தடுக்க வந்த சுந்தர் மனைவி விஜயலட்சுமியை கீழே தள்ளி மானபங்கம் செய்துள்ளனர். மேலும், கொலை மிரட்டல் விடுத்து மூவரும் தப்பிச் சென்றனர்.இதில் முகத்தில் காயமடைந்த சுந்தர் கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.புகாரின்பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கல்மேடுபேட்டை சதிஷ்குமார், அஜித், ஜோதி என தெரியவந்தது.மூவர் மீதும் கொலை மிரட்டல், தாக்குதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X