பொது செய்தி

இந்தியா

வாரிசு சான்று வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம் உத்தரவை திரும்ப பெற முதல்வரிடம் வக்கீல்கள் மனு

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை வருவாய் துறைக்கு வழங்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்'' என, புதுச்சேரி பார் அசோசியேஷன் சார்பில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி பார் அசோசியேஷன் தலைவர் முத்துவேல், பொதுச்செயலர் தாமோதரன் உள்ளிட்டோர், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்த மனு:வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை,
 வாரிசு சான்று வழங்க தாசில்தார்களுக்கு அதிகாரம்  உத்தரவை திரும்ப பெற முதல்வரிடம் வக்கீல்கள் மனு

புதுச்சேரி : ''வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை வருவாய் துறைக்கு வழங்கும் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்'' என, புதுச்சேரி பார் அசோசியேஷன் சார்பில் முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி பார் அசோசியேஷன் தலைவர் முத்துவேல், பொதுச்செயலர் தாமோதரன் உள்ளிட்டோர், சட்டசபையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கொடுத்த மனு:வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை, தாசில்தார், துணை தாசில்தார்களுக்கு வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.இது, வழக்கறிஞர்களுக்கு தொழில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இளம் வழக்கறிஞர்களுக்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தும்.மேலும் நீதித்துறை மூலம் வழங்கப்படும் வாரிசு சான்றிதழ் தீர்ப்பில் வெளிப்படை தன்மையும், உண்மை தன்மையும் சட்ட அங்கீகாரமும் இருந்து வருகிறது.இந்த அதிகாரத்தை, நிர்வாகத் துறைக்கு மாற்றுவதன் மூலம் பொது மக்களுக்கு பணச்செலவு அதிகரிப்பதுடன், இடைத்தரகர்கள் நுழைவதற்கும், போலி சான்றிதழ்கள் பெறவும் வாய்ப்புகள் உள்ளன.தற்போது நிரந்தர மக்கள் நீதிமன்றம் நீதித்துறையின் கீழ் தொடர்ந்து செயல்படுவதால், பொதுமக்கள் குறுகிய காலத்தில் வாரிசு சான்றிதழ் தீர்ப்புகள் பெறமுடியும். எனவே, வாரிசு சான்றிதழ் வழங்கும் அதிகாரத்தை வருவாய் துறைக்கு வழங்கும் உத்தரவை அரசு உடனடியாக திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X