பொது செய்தி

இந்தியா

புதிதாக 54 பேருக்கு தொற்று

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொற்று பாதித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,069 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 54 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 109 பேர் தொற்றில் இருந்து

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. தொற்று பாதித்த ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 4,069 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 54 பேருக்கு தொற்று உறுதியானது. இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 517 ஆக உயர்ந்துள்ளது.நேற்று முன்தினம் 109 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். அதையடுத்து, குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 818 ஆக உயர்ந்தது.புதுச்சேரியில் ஒருவர், தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1832 ஆக அதிகரித்தது. மருத்துவமனைகளில் 141 பேர், வீட்டு தனிமையில் 726 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பரவல் 1.33 சதவீதமாகவும், இறப்பு சதவீதம் 1.46 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 97.85 ஆக அதிகரித்துள்ளது.நேற்று முன்தினம் வரை 9 லட்சத்து 12 ஆயிரத்து 331 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X