புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதியில் வீடு வீடாக சென்று முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.புதுச்சேரியை நுாறு சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்ட மாநிலமாக மாற்ற, சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது .
அதையொட்டி, விடுபட்ட அனைவருக்கும் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்த, சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை எம்.எல்.ஏ., நேரு நேற்று துவக்கி வைத்தார்.கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.