ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணத்தில் ஸ்ரீபழமலைநாதர் சிட்ஸ் பிரைவேட் லிமிடெட் திறப்பு விழா நடந்தது.விருத்தாசலம் ஸ்ரீபழமலைநாதர் சிட்ஸ் பிரேவேட் லிமிடெட் நிறுவனத்தின், சேவை மையம் ஸ்ரீமுஷ்ணம் பழைய பஸ் நிலையம், கனகதாரா காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் நேற்று திறக்கப்பட்டது. இயக்குனர் செந்தில்குமார், ஆனந்தி செந்தில்குமார், நிர்வாக இயக்குனர் ஹரிகிருஷ்ணன், பிரீத்தி ஹரிகிருஷ்ணன் வரவேற்றனர்.
காலை 9:15 மணிக்கு மேல், 10:15 மணிக்குள், தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் செங்கோல் சேவை மையத்தை திறந்து வைத்தார். அய்யன் ஜூவல்லரி உரிமையாளர் சத்தியநாதன், கார்த்திக் பேங்கர்ஸ் ஜம்புலிங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். வேப்பூர் சேவை மைய வர்த்தக மேலாளர் இளையபெருமாள், தலைமை அலுவலக வசூல் மேலாளர் தனவேல், ஸ்ரீமுஷ்ணம் மேலாளர் ராஜா, வர்த்தக மேலாளர் பார்த்திபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Advertisement