புதுச்சேரி : சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3 மாதங்களுக்கான இலவச அரிசி நாளை (22ம் தேதி) முதல் வழங்கப் படுகிறது
.இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை உதவி இயக்குநர் பாஸ்கரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:கொரோனா தொற்று பரவல் காரணமாக, மத்திய அரசு புதுச்சேரி மாநிலம் முழுவதும் தேசிய உணவு பாதுகாப்பு திட்ட பயனாளிகளான சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கி வருகிறது.இவர்களுக்கு, செப்டம்பர், அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கான இலவச அரிசி, நபர் ஒன்றுக்கு தலா 5 கிலோ வீதம் 3 மாதத்திற்கு 15 கிலோ வழங்கப்பட உள்ளது.இந்த அரிசி நாளை (22ம் தேதி) முதல் அனைத்து தொகுதிகளிலும் வழங்கப் படும். முன்னர் அரிசி வழங் கிய பள்ளி மற்றும் மையங்களுக்கு சென்று இலவச அரிசியை பெற்றுக் கொள்ளலாம். பயனாளிகள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வருவதோடு, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.