விருத்தாசலம் : விருத்தாசலம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்செல்வி கணேஷ் மனுதாக்கல் செய்தார்.விருத்தாசலம் ஒன்றியம், 7வது வார்டு இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளராக தமிழ்செல்வி கணேஷ் தேர்வு செய்யப்பட்டார்.
அவர், அ.தி.மு.க., வழக்கறிஞர் விஜயகுமார், ஐ.டி., அணி மண்டல நிர்வாகி அருண் ஆகியோருடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்வடிவு முன்னிலையில் நேற்று மனுதாக்கல் செய்தார்.தொடர்ந்து, மனுதாக்கல் செய்த வேட்பாளருக்கு அ.தி.மு.க., தேர்தல் பொறுப்பாளர் பாஸ்கரன், நகர செயலாளர் சந்திரகுமார், முன்னாள் நகராட்சித் தலைவர் அருளழகன், பேரவை மாவட்ட செயலாளர் ரமேஷ், எம்.ஜி.ஆர்., இளைஞரணி அரங்கமணிவண்ணன், நகர தலைவர் தங்கராசு, ஒன்றிய சேர்மன் செல்லதுரை, நிர்வாகிகள் முக்தார் அலி, செல்வராஜ் மற்றும் ஊராட்சி தலைவர்கள் அண்ணாதுரை, ஜெயந்தி வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர் வேல்முருகன், தேவபிரசாத், குபேரதாஸ், நல்லதம்பி, வேங்கடவேணு, துணை செயலாளர் சத்யாசெல்வம், ராஜேந்திரன், பெரியசாமி, வேலு, ஐ.டி., அணி ஜெயபால் உட்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE