ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதம் | Dinamalar

ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் வாக்குவாதம்

Added : செப் 21, 2021 | |
நெல்லிக்குப்பம், : மேல்பட்டாம்பாக்கத்தில் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதம்செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான வேட்ட வெங்கட்ராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பண்ருட்டி சாலையை ஒட்டி விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்து

நெல்லிக்குப்பம், : மேல்பட்டாம்பாக்கத்தில் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற அதிகாரிகளிடம் ஆக்கிரமிப்பாளர்கள் வாக்குவாதம்செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான வேட்ட வெங்கட்ராய பெருமாள் கோவிலுக்கு சொந்தமான பண்ருட்டி சாலையை ஒட்டி விவசாய நிலம் உள்ளது.

இந்த நிலத்திற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருந்தனர். நோட்டீஸ் அனுப்பியும் காலி செய்யவில்லை. இந்நிலையில் நேற்று செயல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலையில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றனர். இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. இன்ஸ்பெக்டர் அசோகன் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு வேலி அமைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X