பொது செய்தி

இந்தியா

கேரள மீன்கள் இறக்குமதிக்கு எதிர்ப்பு

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : கேரளாவில் இருந்து ரசாயனம் பயன்படுத்தி கொண்டு வரப்படும் மீன்களை புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை விதிக்க கோரி, விசைப்படகு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.புதுச்சேரியில் உள்ளூர் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது.புரட்டாசி மாதம் துவங்கி உள்ளதால் மீன்
 கேரள மீன்கள் இறக்குமதிக்கு எதிர்ப்பு

புதுச்சேரி : கேரளாவில் இருந்து ரசாயனம் பயன்படுத்தி கொண்டு வரப்படும் மீன்களை புதுச்சேரியில் விற்பனை செய்ய தடை விதிக்க கோரி, விசைப்படகு உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் உள்ளூர் மீனவர்கள் பிடித்து வரும் மீன்கள் மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்படும் மீன்களும் விற்பனை செய்யப்படுகிறது.புரட்டாசி மாதம் துவங்கி உள்ளதால் மீன் விற்பனை சரிந்துள்ளது. இதனால் உள்ளூர் மீனவர்கள் தாங்கள் பிடித்த மீன்களை, நேரு வீதி மீன் மார்க்கெட்டிற்கு கொண்டு வந்தனர்.இதற்கு, வெளிமாநில மீன்களை விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.அதை தொடர்ந்து புதுச்சேரி விசைப்படகு மீனவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் ஆலோசனை நடத்தினர்.விசைப்படகு உரிமையாளர் சங்கத் தலைவர் ஜெயமுரளி தலைமை தாங்கினார்.இதில், கேரளாவில் கொரோனா அதிகரித்து வருவதாலும், அங்கிருந்து ரசாயனம் பயன்படுத்தி கொண்டு வரப்படும் மீன்களை இங்கு விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும். உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த செயலை அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.இது தொடர்பாக முதல்வர் ரங்கசாமி, மீன்வளத்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுப்பது. கோரிக்கைகளை அரசு ஏற்காவிடில் தொடர் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X