பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் மருத்துவ சுற்றுலா கவர்னருடன் முதல்வர் ஆலோசனை

Added : செப் 21, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து கவர்னருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.இதுகுறித்து கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல்வர் ரங்கசாமி நேற்று காலை 10:05 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் தமிழிசையை சந்தித்து, 30 நிமிடம் பேசினார்.அப்போது, புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை உலகத் தரம்
 புதுச்சேரியில் மருத்துவ சுற்றுலா கவர்னருடன் முதல்வர் ஆலோசனை

புதுச்சேரி : புதுச்சேரியில் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து கவர்னருடன், முதல்வர் ஆலோசனை நடத்தினார்.இதுகுறித்து கவர்னர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல்வர் ரங்கசாமி நேற்று காலை 10:05 மணிக்கு கவர்னர் மாளிகைக்கு சென்று, கவர்னர் தமிழிசையை சந்தித்து, 30 நிமிடம் பேசினார்.

அப்போது, புதுச்சேரி அரசு மருத்துவமனைகளை உலகத் தரம் வாய்ந்ததாக தரம் உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதில், அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை அளிக்கும் வகையில் கட்டமைப்புகளை மேம்படுத்துவது. இதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்கள் பெறுவது குறித்து கவர்னர் ஆலோசனை வழங்கினார்.மேலும், புதுச்சேரியை வருங்காலத்தில் மருத்துவத் தலைநகரமாக மேம்படுத்தவும், மருத்துவ சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து கவர்னர் ஆலோசனை வழங்கினார்.கவர்னர், மருத்துவராக இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X