தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் 'குட்டு'

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி-'லோக்சபா, சட்டசபை தேர்தல்களை நடத்தும்போது, உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு மட்டும் தொடர்ந்து அவகாசம் கேட்பது ஏன்' என, தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.தமிழகத்தில் 2019ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், ஒன்பது மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இது

புதுடில்லி-'லோக்சபா, சட்டசபை தேர்தல்களை நடத்தும்போது, உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு மட்டும் தொடர்ந்து அவகாசம் கேட்பது ஏன்' என, தமிழக தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்து உள்ளது.



latest tamil news


தமிழகத்தில் 2019ல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அப்போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால், ஒன்பது மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடத்தப்படவில்லை.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'செப்., 15க்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. அதன்படி இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல், அக்., 6 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த், ஹீமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன், உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, 'தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை நடத்துவதற்கு மேலும் ஏழு மாதங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்' என, தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் கோரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாதது குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்தக் கோரியும் வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன.விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


அதனால், அந்தக் கோரிக்கை தற்போதைக்கு இந்த வழக்குக்கு பொருந்தாது.தமிழகத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தல்களை நடத்தும்போது, உள்ளாட்சி தேர்தல்களை மட்டும் ஏன் நடத்த முடியாது. எதற்காக தமிழக தேர்தல் ஆணையம் தொடர்ந்து அவகாசம் கேட்கிறது?நகர்ப்புற உள்ளாட்சிக்கு தேர்தல் நடத்துவது குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் இரண்டு நாட்களுக்குள் புதிதாக மனு தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின் அதில் முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
21-செப்-202107:56:18 IST Report Abuse
venkatan தமிழக ஒன்றிய அரசு,மாநிலத்தில் சுய ஆட்சியும் கிராம மாவட்ட அளவில் ஒன்றியத்தை சார்ந்து இருப்பதையுமே விரும்புகிறது.கிராம மாவட்ட அளவில் மக்களின் தன்னாட்சியை விரும்பவில்லை.They are not interested in democratic de centralization and devolution of powers to Panchayat raj.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X