ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு; ஆர்.எஸ்.எஸ்., கோரிக்கை நிராகரிப்பு

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
மும்பை-காங்., முன்னாள் தலைவர் ராகுல் மீதான அவதுாறு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரின் கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.மஹாராஷ்டிராவின் பிவாண்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ராஜேஷ் குந்தே, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பிவாண்டியில் பேசிய ராகுல், மஹாத்மா

மும்பை-காங்., முன்னாள் தலைவர் ராகுல் மீதான அவதுாறு வழக்கில் ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரின் கோரிக்கையை மும்பை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.



latest tamil news


மஹாராஷ்டிராவின் பிவாண்டியைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் ராஜேஷ் குந்தே, மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2014 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது பிவாண்டியில் பேசிய ராகுல், மஹாத்மா காந்தியின் படுகொலையுடன், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தை தொடர்புபடுத்தினார்.

இது தொடர்பாக என் புகாரில், பிவாண்டி போலீஸ் 2014ல் எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது. பிவாண்டி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தேன்.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் 2014 டிச.,ல் ராகுல் வழக்கு தொடர்ந்தார். அப்போது அவர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு எந்த வித்தியாசமும் கிடையாது.


latest tamil news


'பா.ஜ.,வுக்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ்., பெயரைக் குறிப்பிட்டு விட்டேன்' என, ராகுல் தெரிவித்திருந்தார். பிவாண்டி நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில் ராகுலின் இந்த மனுவை ஆதாரமாக எடுத்துக் கொள்ளும்படி கூறினேன். ஆனால் அது ஏற்கப்படவில்லை.ராகுலின் மனுவை என் வழக்கின் ஆதாரமாக எடுத்துக் கொள்ள உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ராஜேஷ் குந்தே யின் கோரிக்கையை நிராகரித்தது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
21-செப்-202113:19:57 IST Report Abuse
தஞ்சை மன்னர் ஹி ஹி நம்பிட்டோம்
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
21-செப்-202112:19:12 IST Report Abuse
Milirvan எது எப்படியோ..
Rate this:
Cancel
21-செப்-202108:52:23 IST Report Abuse
பேசும் தமிழன் பிறகு என்ன.. பப்பு நீ உன் பாட்டுக்கு... உளறிகொட்டு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X