மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் போதும்: உச்ச நீதிமன்றம்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புதுடில்லி-'மாணவர்கள், அரசியல் சாசனம் வாயிலான தீர்வுகளை நாடுவதை விட படிப்பில் கவனம் செலுத்தினால் போதும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.டில்லியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், தன் தந்தையும், வழக்கறிஞருமான ரவி பிரகாஷ் மெஹ்ரோத்ரா வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துஉள்ளார். அதில், கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறந்து, மாணவர்கள் கல்வி

புதுடில்லி-'மாணவர்கள், அரசியல் சாசனம் வாயிலான தீர்வுகளை நாடுவதை விட படிப்பில் கவனம் செலுத்தினால் போதும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



latest tamil news



டில்லியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஒருவர், தன் தந்தையும், வழக்கறிஞருமான ரவி பிரகாஷ் மெஹ்ரோத்ரா வாயிலாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துஉள்ளார். அதில், கொரோனா காரணமாக மூடப்பட்ட பள்ளிகளை திறந்து, மாணவர்கள் கல்வி பயில உத்தரவிடும்படி கோரப்பட்டுள்ளது. இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு பிறப்பித்த உத்தரவு:பல நாடுகளில் அவசரமாக பள்ளிகள் திறக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட பாதிப்பை நாம் பார்க்கிறோம். இங்கும் கேரளா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

கொரோனா மீண்டும் தலை துாக்கும் என்ற அச்சம் இன்னும் நீங்கவில்லை. குழந்தைகளுக்கு இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை. அதுபோல அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை; அது குறித்த தரவுகளும் அமர்விடம் இல்லை.அதனால், அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பும்படி உத்தரவிட முடியாது. அது, அந்தந்த மாநில அரசுகளின் முடிவைப் பொறுத்தது.மாணவர்கள், அரசியல் சாசனம் வாயிலான தீர்வுக்கு பதிலாக பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது.


latest tamil news


இந்த மனு விளம்பரத்திற்காக போடப்பட்டதாக கூறவில்லை. எனினும், கொரோனா தொடர்பாக மாநில அரசுகளின் முடிவில் தலையிட விரும்பவில்லை. இந்த மனுவை திரும்பப் பெற உத்தரவிடப்படுகிறது.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மனுவை திரும்பப் பெறுவதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
21-செப்-202111:23:27 IST Report Abuse
sankaseshan இன்றும் மாணவர்களை தூண்டிவிட்டு அரசியல் செய்வது தமிழ்நாட்டில் தொடர்கிர து . 1967 லில் ஆரம்பித்தது Dmk வழி காட்டியது
Rate this:
Cancel
Bala Murugan - Tuticorin(Thoothukudi),இந்தியா
21-செப்-202110:02:51 IST Report Abuse
Bala Murugan அப்படியென்றால் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் எல்லோருக்கும் தடுப்பூசி செலுத்துங்கள் கல்லூரி பேராசிரியர், பேராசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்துங்கள். செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு சம்பளம் கிடையாது பணிக்கு வர வேண்டாம் என்று எச்சரித்து விடுங்கள்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-செப்-202109:46:15 IST Report Abuse
duruvasar இதுக்குன்னே டில்லியில் ஒரு யுனிவர்சிட்டி செயல்பட்டுக் கொண்டிருப்பது நீதியரசர்களுக்கு தெரியாதோ ? ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X