அரசு அதிகாரிகள் குறித்த உமா பாரதியின் பேச்சால் சர்ச்சை| Dinamalar

அரசு அதிகாரிகள் குறித்த உமா பாரதியின் பேச்சால் சர்ச்சை

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (16)
Share
போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் வசிக்கும் பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 62, இதற்கு முன் முதல்வர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தவர். அரசு அதிகாரிகள் தொடர்பாக அவர் பேசும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அதில் அவர் கூறுவதாவது:மத்திய அமைச்சர், முதல்வர் என 11 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளேன். ஒரு பிரச்னை தொடர்பாக நாங்கள்
உமா பாரதி, பா.ஜ., மூத்த தலைவர், பேச்சு, சர்ச்சை

போபால்-மத்திய பிரதேசத்தின் போபாலில் வசிக்கும் பா.ஜ., மூத்த தலைவர் உமா பாரதி, 62, இதற்கு முன் முதல்வர், மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தவர். அரசு அதிகாரிகள் தொடர்பாக அவர் பேசும் 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news


அதில் அவர் கூறுவதாவது:மத்திய அமைச்சர், முதல்வர் என 11 ஆண்டுகள் பதவியில் இருந்துள்ளேன். ஒரு பிரச்னை தொடர்பாக நாங்கள் விவாதித்து நடவடிக்கை மேற்கொள்வோம். அதிகாரிகள் எங்களை சுற்றி நிற்பர். அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்கும் நாங்கள்தான், அவர்கள் எந்த பதவியில் இருக்க வேண்டும் என முடிவு செய்கிறோம். எங்கள் அரசியலுக்கு அவர்களை பயன்படுத்திக்கொள்கிறோம். எங்கள் செருப்புகளை மட்டுமே அவர்களால் எடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறுகிறார்.இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X