பொது செய்தி

தமிழ்நாடு

இன்று முதல் 4 நாட்களுக்கு பல மாவட்டங்களில் கன மழை

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021
Share
Advertisement
'இன்று முதல் நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் இடி,

'இன்று முதல் நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில், இடி, மின்னலுடன் கன மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.



latest tamil news


சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

வேலுார், திருவள்ளூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நாளை இடி, மின்னலுடன் கன மழை பெய்யும். டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், 23ம் தேதி கன மழை பெய்யும்.வரும் 24ம் தேதி டெல்டா மாவட்டங்கள், சேலம், விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும்.


latest tamil news


சென்னையில் இன்று வானம் மேக மூட்டமாக காணப்படும்; சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மாநிலத்தில் அதிகபட்சமாக, ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவில், 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X