மது போதையில் தீக்குளித்த பெண் ; இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழக நிகழ்வுகள்சிறுமியை ஏமாற்றியவர் போக்சோவில் கைதுசிதம்பரம் : புவனகிரி அருகே திருமணம் செய்வதாக சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா சேந்திரக்கிள்ளை பகுதியை சேர்ந்தவர் ராபின், 21; இவர் 17 வயது சிறுமியை காதலித்தார். திருமணம் ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில்தமிழக நிகழ்வுகள்
சிறுமியை ஏமாற்றியவர் போக்சோவில் கைதுசிதம்பரம் : புவனகிரி அருகே திருமணம் செய்வதாக சிறுமியை ஏமாற்றி கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், புவனகிரி தாலுகா சேந்திரக்கிள்ளை பகுதியை சேர்ந்தவர் ராபின், 21; இவர் 17 வயது சிறுமியை காதலித்தார். திருமணம் ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் சிறுமி கர்ப்பமானார். தற்போது ஐந்து மாத குழந்தை உள்ளது.சிறுமி ராபினிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தியும் ராபின் மறுத்து சிறுமிக்கு மிரட்டல் விடுத்துள்ளார். சிறுமியின் பெற்றோர் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ராபினை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.latest tamil news

மாணவிக்கு ஆபாச வீடியோ மெக்கானிக் மீது வழக்குகடலுார் : பள்ளி மாணவிக்கு செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பிய சென்னை மெக்கானிக் மீது 'போக்சோ' சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.

கடலுார் மாவட்டம் வடலுார் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறார். இவருக்கு சென்னையைச் சேர்ந்த அசோகன் மகன் அப்பன்ராஜ், 34; என்பவருடன் முக நுால் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. மெக்கானிக் வேலை செய்யும் அப்பன்ராஜ், மாணவியின் மொபைல் போனில் ஆபாசமாக பேசியும், ஆபாச புகைப்படங்கள், ஆபாச வீடியோவும் அனுப்பி மன உளைச்சலை ஏற்படுத்தினார். வடலுார் போலீசார் நேற்று, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப் பதிந்து அப்பன்ராஜை தேடி வருகின்றனர்.


சிறுமியிடம் சில்மிஷம்: வாலிபர் கைதுதிருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த செம்படையைச் சேர்ந்தவர் பெஞ்சமின் மகன் ஜான்பால், 33; இவர் நேற்று முன்தினம் இரவு 2ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். உடன், ஜான்பால் தப்பியோடினார். பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், ஜான்பால் மீது போக்சோ பிரிவில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


பன்னீர் சோடா குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்திபுதுவண்ணாரப்பேட்டை, : பன்னீர் சோடா வாங்கிக் குடித்த சிறுவர்களுக்கு ரத்த வாந்தி வந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சென்னை புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார்; டிரைவர். இவரது மகன் லட்சுமணன், 6. இதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.

நேற்று மதியம் லட்சுமணனும், இவரது அத்தை மகன் ஓமேஸ்வரனும், 8, சேர்ந்து, வீட்டிற்கு அருகிலுள்ள பெட்டிக்கடையில், 'பிளாஸ்டிக்' பாட்டிலில் உள்ள பன்னீர் சோடாவை வாங்கிக் குடித்துள்ளனர். உடனே லட்சுமணனும், ஓமேஸ்வரனும் ரத்த வாந்தி எடுத்துள்ளனர்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனே ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு லட்சுமணன், ஓமேஸ்வரன் ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி, புதுவண்ணாரப்பேட்டை போலீசார், பன்னீர் சோடா காலாவதியானதா என விசாரிக்கின்றனர்.


அரை கிலோ தங்கத்துடன் ஊழியர் மாயம்கீழ்ப்பாக்கம் : கீழ்ப்பாக்கத்தில், நகை பட்டறையில் இருந்து, அரை கிலோ தங்கத்துடன் மாயமான ஊழியர்குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கீழ்ப்பாக்கம், ராஜரத்தினம்தெருவைச் சேர்ந்தவர் அருண்குமார், 37. அதே பகுதியில், 10 ஆண்டுகளுக்கு மேல், நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது பட்டறையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, தப்பன் ரூடிதாஸ், 34, என்பவர், இரண்டு ஆண்டுகளாக நகை 'கட்டிங்' செய்யும் வேலை செய்து வந்துள்ளார்.இவரிடம், கடந்த 13ம் தேதி, அருண்குமார் 1,236 கிராம் தங்கத்தை, 'கட்டிங்' செய்ய கொடுத்துள்ளார்.கட்டிங் வேலை குறித்து தெரிந்துக் கொள்ள, 16ம் தேதி அருண்குமார் பட்டறைக்கு வந்தபோது, தப்பன் ரூடிதாஸ், கட்டிங் செய்வதற்காக கொடுத்த நகைகளில், 453 கிராம் நகையுடன் மாயமானது தெரிய வந்தது.இதையடுத்து, கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசாரிடம், 16ம் தேதி அருண்குமார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், நேற்று போலீசார் வழக்கு பதிந்து, பட்டறை ஊழியரை தேடி வருகின்றனர்.


மது போதையில் விபரீதம் தீக்குளித்த பெண் 'சீரியஸ்கொடுங்கையூர் -கொடுங்கையூரில், மதுபோதையில் தீக்குளித்த பெண் கவலைக்கிடமாக உள்ளார்.

சென்னை கொடுங்கையூர் சந்திரசேகர் நகர், 2வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; கார்பென்டர். இவரின் மனைவி ஜானகி, 52; கொடுங்கையூர் குப்பைமேடில், காகிதம் சேகரிக்கும் வேலை பார்த்து வருகிறார்.இவர்களுக்கு ஒரு மகளும், மூன்று மகன்களும் உள்ளனர். ஜானகிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்றும் மது குடித்ததால், குடும்பத்தார் தட்டிக் கேட்டுள்ளனர்.இதனால், மதுபோதையில் இருந்த ஜானகி ஆத்திரம்அடைந்து, நேற்று மண்ணெண்ணெய் ஊற்றிக் தீக்குளித்தார்.ஆபத்தான நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news

பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய ஆசிரியருக்கு 10 ஆண்டு சிறைசேலம்,-திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பெண்ணை கர்ப்பமாக்கிய தனியார் பள்ளி ஆசிரியருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சேலம், பெரமனுார் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 32; தனியார் பள்ளி ஆசிரியர். 2012ல், கரியகோவில் அருகில் உள்ள கணக்கம்பட்டி பகுதியில் பணிபுரிந்த போது, அப்பகுதியில் சேவையாற்றி வந்த 25 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.11 ஆயிரம் அபராதம்திருமண ஆசை காட்டி, பல முறை பலாத்காரம் செய்துள்ளார். அப்பெண் கர்ப்பமான நிலையில், அவரை ஏமாற்றி வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். புகார்படி கரியகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, செந்தில்குமாரை கைது செய்தனர்.இவ்வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. செந்தில்குமாருக்கு 10 ஆண்டுகள் சிறை, 11 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜெயந்தி நேற்று தீர்ப்பளித்தார்.


பின்னோக்கி இயக்கிய பஸ் டிரைவர்: அடையாளம் தெரியாத 35 வயது நபர் உயிரிழப்பு.கோவை:தொண்டாமுத்துாரை சேர்ந்தவர் ஆறுசாமி, 43; பஸ் டிரைவர். இந்த பஸ்சை லாலி ரோடு சந்திப்பு அருகே உள்ள பெட்ரோல் பங்க்கில் நிறுத்துவது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு நிறுத்திய பஸ்சை, நேற்று காலை வழக்கம் போல், பஸ்சை வெளியே எடுக்க பின்நோக்கி இயக்கினார்.அப்போது பஸ்சின் பின் சக்கரத்தின் அருகே அடையாளம் தெரியாத, 35 வயது மதிக்கத்தக்க நபர் துாங்கி கொண்டிருப்பதை கவனிக்கவில்லை. சக்கரத்தில் சிக்கிய அந்த நபர் அலறியபடியே உயிரிழந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், போக்குவரத்து புலனாய்வு மேற்கு பகுதி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.போலீசார் சடலத்தை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, பஸ் டிரைவரை கைது செய்தனர். உயிரிழந்தது யார் என்று விசாரித்து வருகின்றனர்.
இந்திய நிகழ்வுகள்
ஆபாச பட வழக்கில் ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன்; மும்பை நீதிமன்றம்மும்பை : ஆபாச படம் எடுத்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக கடந்த ஜூலை மாதம் 19-ந் தேதி பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவா் ராஜ்குந்த்ராவை மும்பை போலீசார் கைது செய்தனர். அவரது நிறுவனத்தின் தொழில்நுட்ப பிரிவு அதிகாரி ரியான் தோர்பேயும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் துணை குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் தொழில் அதிபர் ராஜ்குந்த்ரா மற்றும் ரியான் தோர்பே ஜாமீன் கேட்டு மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தனர். அந்த மனுவில், ராஜ்குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போலீசார் ஒரு ஆதாரங்களை கூட குற்றப்பத்திரிகையில் கூறவில்லை. இந்தநிலையில் நேற்று ஆபாச படவழக்கில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு ராஜ்குந்த்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. அவரது கூட்டாளி ரியான் தோர்பேவுக்கும் ஜாமீன் கிடைத்து உள்ளது.


உத்திரப்பிரதேசத்தில் மடாதிபதி தற்கொலைஅலகாபாத் : உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் நகரில் அகில பாரத அகதா பரிஷாத் அமைப்பின் தலைவரான மகந்த் நரேந்திரா கிரி. இவர் பிரக்யாராஜ் நகரில் மடம் ஒன்றின் தலைமை மடாதிபதியாகவும் உள்ளார். இந்தநிலையில் அவர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்தில் 5 பக்க கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். மடாதிபதி தற்கொலை செய்து கொண்டாரா, கொலையா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.


உலக நிகழ்வுகள்மாஸ்கோ-ரஷ்ய பல்கலையில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் எட்டு மாணவர்கள் உயிரிழந்தனர். ரஷ்யாவின் பெர்ம் நகரில் உள்ள மருததுவ பல்கலைக் கழக வளாகத்தின் முதல் தளத்தில் நேற்று அடையாளம் தெரியாத ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுட்டார். இதில் எட்டு மாணவர்கள் பலியாயினர். காயமடைந்த ஆறு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த 'வீடியோ'வில் துப்பாக்கிச்சூட்டில் இருந்து தப்பிக்க, மாணவர்கள் பலரும் கட்டடத்தின் முதல் மாடியில் இருந்து வெளியே குதிக்கும் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. துப்பாக்கியால் சுட்டவர் திமூர் பெக்மன்சுரோவ், 18, என அடையாளம் காணப்பட்டதாகவும், போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் அவர் பலியானதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே பெர்ம் பல்கலையில் படிக்கும் இந்திய மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அங்குள்ள நம் துாதரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.ஆஸி.,க்கு நீர்மூழ்கி கப்பல் அமெரிக்காவுக்கு எச்சரிக்கைசியோல்-'ஆஸ்திரேலியாவுக்கு அணு நீர்மூழ்கி கப்பல்களை கொடுக்கும் முடிவால் ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் அமைதிக்கு பங்கம் ஏற்பட்டால் அமெரிக்கா கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்' என, வட கொரியா எச்சரித்துள்ளது.

இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில், சீனாவின் அத்துமீறலை தடுக்கும் நோக்கில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் இணைந்து அணு நீர்மூழ்கி கப்பல் தயாரிப்பில் ஈடுபட சமீபத்தில் முடிவு செய்தன. இதற்கான ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு எட்டு அணு நீர்மூழ்கி கப்பல்களை வழங்க உள்ளது. இதற்கு வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து வட கொரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் அணு நீர்மூழ்கி கப்பல் தொடர்பான ஒப்பந்தம் மிகப் பயங்கரமானது. ஆசிய - பசிபிக் பிராந்தியத்தின் அமைதியையும், பாதுகாப்பையும் அழிக்கக் கூடியது. இது அணு ஆயுத போட்டியை ஊக்குவிக்கும்.சர்வதேச அணு ஆயுத பரவல் தடை திட்டத்திற்கு எதிரான இந்த ஒப்பந்தத்தால் வட கொரியாவின் பாதுகாப்புக்கு மிகச் சிறிய அளவிலான தாக்கம் ஏற்பட்டாலும் சும்மா விட மாட்டோம். கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
22-செப்-202100:28:53 IST Report Abuse
Aarkay பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் டாஸ்மாக் பேரூராட்சி நாடு.
Rate this:
Cancel
JeevaKiran - COONOOR,இந்தியா
21-செப்-202111:07:21 IST Report Abuse
JeevaKiran ராஜ்குந்த்ரா மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போலீசார் ஒரு ஆதாரங்களை கூட குற்றப்பத்திரிகையில் கூறவில்லை. - இதுதான் இன்றைய போலீசாரை நிலைமை. அதனால்தான் குற்றங்களும் அதிகரிக்கின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X