மசூதியில் குடிநீர் எடுத்ததால் ஹிந்து குடும்பம் மீது தாக்குதல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (71)
Share
Advertisement
இஸ்லாமாபாத்-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மசூதியில் இருந்து குடிநீர் எடுத்து வந்த ஹிந்து குடும்பத்தினரை, அப்பகுதியை சேர்ந்த சிலர் அடைத்து வைத்து துன்புறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.துன்புறுத்தல்பாகிஸ்தானில் 75 லட்சம் ஹிந்துக்கள் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான ஹிந்துக்கள் உள்ளனர். அங்கு வாழும் முஸ்லிம்களுடன்

இஸ்லாமாபாத்-பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மசூதியில் இருந்து குடிநீர் எடுத்து வந்த ஹிந்து குடும்பத்தினரை, அப்பகுதியை சேர்ந்த சிலர் அடைத்து வைத்து துன்புறுத்திய தகவல் வெளியாகி உள்ளது.



latest tamil news




துன்புறுத்தல்

பாகிஸ்தானில் 75 லட்சம் ஹிந்துக்கள் வசிக்கின்றனர். சிந்து மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான ஹிந்துக்கள் உள்ளனர். அங்கு வாழும் முஸ்லிம்களுடன் கலாசாரம், பழக்க வழக்கங்கள், மொழி ஆகியவற்றில் இணக்கமாக வாழ்ந்தாலும், சிறுபான்மை ஹிந்துக்கள் அடிக்கடி துன்புறுத்தலுக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

பஞ்சாப் மாகாணத்தின் ரஹீம்யார் கான் நகரில் ஆலம் ராம் பீல் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்கள் பல ஆண்டுகளாக வயல்களில் பருத்தி பறிக்கும் பணி செய்து வருகின்றனர்.சமீபத்தில் வீட்டருகே உள்ள மசூதியின் குழாயில் இருந்து குடிநீர் பிடித்து வந்தனர். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆலம் ராமின் குடும்பத்தினரை, ஒரு அறைக்குள் அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தினர்.


latest tamil news



போராட்டம்

இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் ஈடுபட்ட நபரின் உறவினர், ஆளும் பாகிஸ்தான் தெஹ்ரீக் இன்சாப் கட்சியை சேர்ந்த எம்.பி.,யின் உறவினர் என்பதால், போலீசார் புகாரை பதிவு செய்யவில்லை. இதையடுத்து வழக்கு பதிவு செய்யும்படி போலீஸ் ஸ்டேஷன் வாசலில் ஆலம் ராம் போராட்டம் நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
27-செப்-202107:26:31 IST Report Abuse
NicoleThomson ஸ்க்யுலர் என்று இந்தியாவில் பேசி சிறுபான்மை என்று கூறி இலவசங்களை பெற்று சுகமாக எந்த கஷ்டமும் இல்லாமல் எல்லாவற்றையும் அனுபவிக்கும் கூட்டத்தினர் கருத்து என்னவாக இருக்கும்?
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
21-செப்-202116:31:47 IST Report Abuse
DVRR இதில் என்ன தவறு???ஏன்??
Rate this:
Cancel
21-செப்-202114:33:32 IST Report Abuse
ராஜா அந்த பாகிஸ்தான்காரனுக்கும் சப்போர்ட் பண்ண நாலு திமுகக்காரன் இருக்கான் பாரு...அவ்வளவு தான் அந்த கட்சியின் தேசப்பற்று.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X