சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை வழியாக கடத்தப்படும் தங்கம்: அதிகரிக்க காரணம் என்ன?

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்துவது அதிகரிக்க, பெயரளவுக்கு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் செயல்படுவதே முக்கிய காரணமாக உள்ளது.கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் விமானங்கள் இயக்கம்
கோவை, தங்கம், கடத்தல், அதிகரிப்பு,

கோவை: கோவை சர்வதேச விமான நிலையம் வழியாக தங்கம் கடத்துவது அதிகரிக்க, பெயரளவுக்கு வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் செயல்படுவதே முக்கிய காரணமாக உள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சார்ஜா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய வெளிநாடுகளுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது. கொரோனா காரணமாக வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, தற்போது மீண்டும் விமானங்கள் இயக்கம் துவங்கியுள்ளது. தற்போதைய நிலையில் கோவை-சார்ஜா இடையே'ஏர் அரேபியா' விமானம் இயக்கப்படுகிறது. மற்ற வெளிநாடுகளுக்கு விமான சேவை துவங்கவில்லை. மேலும், சென்னை, ஹைதராபாத் போன்ற உள்நாட்டு நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு விமான சேவை துவங்கிய, 20 நாட்களிலேயே, 3 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், சிகரெட் உட்பட வெளிநாட்டு பொருட்களை கடத்தி வந்த ஆறு பேரை, கடந்த வாரம், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஆனால், இவர்களின் பெயர் விபரம் உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. மேலும் தங்கம் கடத்தி வரும் 'குருவி'களை மட்டும் பிடிக்கும் அதிகாரிகள், முக்கிய நபர்களை கோட்டை விடுவதால், கோவை வழியாக தங்கம் கடத்துவது அதிகரித்துள்ளது.

இதுகுறித்து, ஓய்வு பெற்ற சுங்க அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து குழுக்களாக செயல்படும் தங்க கடத்தல் கும்பல், வெவ்வேறு வகைகளில் விமானங்கள் வாயிலாக தங்கம் கடத்தி வருகின்றனர். சில நேரங்களில் கிடைக்கும் ரகசிய தகவல்களை கொண்டு, தங்க கடத்தல் நபர்களை விமானநிலையங்களில் அதிகாரிகள் பிடிக்கின்றனர். அதுபோல் சிக்கும் குருவிகளிடம் இருந்து, பல கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு பொருட்களை பறிமுதல் செய்து கைது நடவடிக்கை எடுக்கின்றனர்.அதற்கு மேல் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை.


latest tamil news



கோவை வழியாக ஆண்டுதோறும், 20 கோடி முதல், 30 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெளிநாட்டு பொருட்கள் கடத்தப்படுகின்றன. தங்கத்தை அனுப்பி வைப்பவர், அதனை இங்கு வாங்குபவர் குறித்து, உரிய முறையில் விசாரணை நடத்தப்படுவதில்லை என்று தோன்றுகிறது. அதற்காக முயற்சிகளை எடுக்காததால் தான் தொடர்ந்து தங்கம் கடத்தல் நடக்கிறது. இதை தவிர்க்க, அதிகாரிகள் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பின்னணியில் உள்ள நபர்களை பிடிக்க வேண்டும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்ததால் கடத்தல் நடக்கவில்லை. தற்போது விமான சேவை துவங்கிய, 20 நாட்களிலேயே, 3 கோடி ரூபாய் மதிப்பில் தங்கம் மற்றும் வெளிநாட்டு பொருட்கள் சிக்கியுள்ளன. வரும் நாட்களில் கடத்தலை கட்டுப்படுத்த, உரிய நபர்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


உண்மையான தகவலா?


கோவை விமானநிலையத்தில் கைப்பற்றப்படும் தங்கம் மற்றும் வெளிநாட்டு பொருட்கள் குறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் உரிய தகவல்களை தெரிவிப்பதில்லை. பிடிபட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்து தான் தகவல் தெரிவிக்கின்றனர். அதிலும், பிடிப்பட்ட நபர்களின் பெயர்களை கூட சொல்வதில்லை.

இதுகுறித்து கேட்டால், பிடிப்பட்டது ஒரிஜினல் தங்கமா என்று உறுதிப்படுத்த வேண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் பிடிப்பட்ட தங்கத்தின் அளவு, மதிப்பு முழுமையாக தெரிவிக்கப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
21-செப்-202116:56:08 IST Report Abuse
Kumar ஏதோ பாவம் தங்கம் கடத்தி பிழைக்கும் மூர்க்கர்கள், கம்யூனிஸ்ட்களின் வாழ்வில் விளையாட வேண்டாம். டீக்கு ,வரக்கிக்கு என்ன செய்வார்கள். உண்டியல் குலுக்கி எவ்வளவுதான் பணம் சேர்க்க முடியும் வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
21-செப்-202115:38:56 IST Report Abuse
jayvee மங்களூர் திருச்சி வரிசையில் இப்போது கோவை.. கேரளாவிற்கு மிக அருகில் உள்ளதும் ஒரு காரணம்
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
21-செப்-202114:22:08 IST Report Abuse
vpurushothaman வேலியே பயிரை மேய்கிறதோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X