பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் நடைபாதை பணியில் வீணாகும் வரிப்பணம்: கிரானைட் கற்களால் தடுமாறும் பாதசாரிகள்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (22)
Share
Advertisement
சென்னையில், கிரானைட் கற்களை கொண்டு அமைக்கப்படும் புதிய நடைபாதை பணிகளுக்காக, ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நடைபாதையில் இருந்து, கருங்கற்கள், சிமென்ட் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, அவை குப்பையில் வீசப்படுவதால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சி சார்பில், 387 கி.மீ., நீளம் கொண்ட, 471 பஸ் சாலைகள்; 5,525 கி.மீ., நீளம் கொண், 33 ஆயிரத்து 374
சென்னை,  நடைபாதைபணி, வீண், வரிப்பணம், கிரானைட் கற்கள், பாதசாரிகள்

சென்னையில், கிரானைட் கற்களை கொண்டு அமைக்கப்படும் புதிய நடைபாதை பணிகளுக்காக, ஏற்கனவே நல்ல நிலையில் உள்ள நடைபாதையில் இருந்து, கருங்கற்கள், சிமென்ட் கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, அவை குப்பையில் வீசப்படுவதால், மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில், 387 கி.மீ., நீளம் கொண்ட, 471 பஸ் சாலைகள்; 5,525 கி.மீ., நீளம் கொண், 33 ஆயிரத்து 374 உட்புற சாலைகள் பராமரிக்கப்படுகின்றன.இது போக, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பல பஸ் சாலைகள் பராமரிக்கப்படுகின்றன. சாலையின் அகலத்தின் அடிப்படையில் நடைபாதை அமைக்கப்படுகிறது. சென்னையில், சதுர வடிவ கருங்கற்கள் பதித்த நடைபாதைகள் இருந்தன. இவை, சிறுவர்கள், கர்பிணியர், மூத்த குடிமக்கள் போன்ற அனைத்து தரப்பினரும் நடப்பதற்கு ஏதுவாக இருந்தது.அதே போல், இளைய தலைமுறையினர், நவீன செருப்புகள் அணிந்து நடந்தாலும், சறுக்காமல் பிடிமானத்துடன் இருந்தது.

தற்போது, 'ஸ்மார்ட் சிட்டி' அறிவிப்புக்கு பின், பழைய நடைபாதை கற்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு, பளபளப்பாக மின்னும் கிரானைட் கற்களால் நடைபாதை அமைக்கப்படுகிறது.இதில், தண்ணீர், வழுக்கும் தன்மை கொண்ட பொருட்கள் கிடந்தால் அதை மிதிக்கும் பாதசாரிகள், நிலைதடுமாறுவது நிச்சயம். கைத்தடியுடன் நடக்கும் மூத்த குடிமக்கள், புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரானைட் நடைபாதைகளில் நடக்கவே அச்சப்படுகின்றனர். மழைக்காலங்களில் பெரும்பாலானோர், வழுவழுப்பான நடைபாதையில் நடக்க தயங்கி, அதற்கு பதில் சாலையில் நடக்கின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன், மழை நேரத்தில், நடைபாதையில் இருந்து இறங்கி சாலையில் நடந்து சென்ற கல்லுாரி மாணவியர், லாரி மோதி பலியாகினர். கிண்டியில் நடந்த இந்த சம்பவம், அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. பின், அனைவரும் அதை மறந்துவிட்டனர். காலுக்கு பிடிமானம் கொடுக்கும், கருங்கற்கள் எந்த காலத்திலும் அழிவதில்லை. அவற்றை அகற்றிவிட்டு, நவீனம் என்ற பெயரில், உயிருக்கு உலை வைக்கும், கிரானைட் கற்களை நடைபாதையில் பதிப்பதால், விபத்துடன், மக்கள் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


latest tamil news
கால் பிடிமானம் இருக்காதுஇது குறித்து, பெயர் கூற விரும்பாத, சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர் கூறியதாவது: பழைய கருங்கற்கள், உளியால் செதுக்கியவை. அதில் சொரசொரப்பு இருக்கும். எந்த காலத்திலும் பாதுகாப்பானவை. கிரானைட் கற்களில், நடப்பதற்கான கால் பிடிமானம் இருக்காது. அதில், சறுக்கும் தன்மை அதிகம். கிரானைட் ஊழலில், இதுவும் ஒன்று தான்.கிரானைட் கல் பதித்த நடைபாதை தேவையில்லாதது. எப்போதும் ஆபத்தானது. குப்பையில் வீசிய கருங்கற்களை, அரசு வளாக பார்க்கிங் வசதிக்காக பயன்படுத்தி இருக்கலாம். இனியாவது, கிரானைட் கற்கள் பதிப்பதை அரசு தடுக்க வேண்டும்.

நடைபாதைகளில் இருந்து அகற்றப்பட்ட கருங்கல் குப்பையில் கொட்டப்பட்டு உள்ளது. அது போல், மழை நீர் பூமிக்குள் செல்ல ஏதுவாக, சாலையோரம் சிமென்ட் கற்கள் பதித்த, சாலை மட்ட நடைபாதை அமைக்கப்பட்டது. அதிலும், நவீனமாக அமைக்கிறோம் என்ற பெயரில், தகர்த்து குப்பையில் போடப்படுகிறது. இதனால், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.பழைய கருங்கல்லால் ஆன நடைபாதையில், எந்த பயமும் இல்லாமல் நடந்து சென்றோம். சறுக்கும் தன்மை கொண்ட நடைபாதை அமைத்துள்ளதால், அதில் நடக்கவே பயமாக உள்ளது. இதனால், சாலையில் இறங்கி நடக்கிறோம். பிரதான சாலையில் உள்ள, பல நடைபாதைகளில், இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும் வகையில், தடுப்பு இல்லாமல் கட்டமைக்கப்பட்டு உள்ளது. எப்போதும், அழியாத கருங்கற்களை குப்பையில் வீசியது, பொதுமக்கள் வரிப்பணத்தையும் சேர்த்து வீசியதற்கு சமம். - பாதசாரிகள்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
22-செப்-202106:08:25 IST Report Abuse
Natarajan Ramanathan ஒரு தத்தியை முதல்வராக்கி விட்டு இப்படி புலம்புவதால் ஒருபிரயோஜனமும் இல்லை
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
21-செப்-202116:45:17 IST Report Abuse
Rajas முன்பெல்லாம் ரோடு நடுவில் மேடாக இருபுறங்களில் பள்ளமாக மழை நீர் வழிந்தோடும் படி இருக்கும். இரண்டு ஓரங்களில் சிறிய மழை நீர் கால்வாய் இருக்கும். எவ்வளவு மழை பெய்தாலும் மழை நிற்காது. இப்போது வீட்டின் சொந்தக்காரர்கள் தங்கள் வாசற்படியை பிளாட்பார்ம்களில் கொண்டு வந்து மழை நீர் கால்வாயை அடைத்து விட்டார்கள். மழை நீர் ரோட்டில் நின்று ரோட்டை அரிகிறது. (தார் ரோடு என்பதில் தாரே இல்லை என்பது இன்னொரு ஊழல்) இதனால் சென்னை போன்ற நகரங்களில் வருடத்திற்கு மூன்று முறை ரோடு போடுகிறார்கள். மூன்று முறையும் கமிஷன் தான்.
Rate this:
Cancel
Rajas - chennai,இந்தியா
21-செப்-202116:41:29 IST Report Abuse
Rajas 30-40 வருடங்களுக்கு முன் பிளாட்பார்ம்களில் சாதாரண வட்ட சிமெண்ட் கல் போட்டு வைத்திருப்பார்கள். பிளாட்பார்ம்களில் ஓரத்தில் வேறு ஒரு கல் போட்டு கருப்பு வெள்ளை கலரில் பெயிண்ட் நடித்திருப்பார்கள். கூடவே பிளாட்பார்ம்களில் இரும்பு கொண்ட சிமெண்ட் கைப்பிடி சுவர் வைத்திருப்பார்கள். வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பெயிண்ட் அடிப்பார்கள். 10 வருடங்களுக்கு மேல் வரும். செலவு கிடையாது. பல வருடங்களுக்கு மேல் லைப் இருக்கும் என்றால் கமிஷன் எப்படி பார்ப்பது. அது தான் இந்த வேலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X