சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

பெண் குழந்தைகளுக்கு சொல்வது அவசியம்!

Added : செப் 21, 2021
Share
Advertisement
பெண்களுக்கான சுத்தம் குறித்து கூறும், சென்னையின் மூத்த மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்: தினசரி இரண்டு வேளை குளிக்கும்போது பிறப்புறுப்பை சுத்தம் செய்வதே போதுமானது; 'வஜைனல் வாஷ்' அவசியமில்லை. லேசான நறுமணம் கொண்ட, அதிக ரசாயனங்கள் சேர்க்காத சோப்பாக இருந்தால், பிறப்புறுப்பு இயற்கை வழுவழுப்பை இழக்காமல் இருக்கும்.பிறப்புறுப்புக்குள் நகங்கள் கொண்ட விரல்களால்

பெண்களுக்கான சுத்தம் குறித்து கூறும், சென்னையின் மூத்த மகப்பேறு மருத்துவர் கமலா செல்வராஜ்: தினசரி இரண்டு வேளை குளிக்கும்போது பிறப்புறுப்பை சுத்தம் செய்வதே போதுமானது; 'வஜைனல் வாஷ்' அவசியமில்லை. லேசான நறுமணம் கொண்ட, அதிக ரசாயனங்கள் சேர்க்காத சோப்பாக இருந்தால், பிறப்புறுப்பு இயற்கை வழுவழுப்பை இழக்காமல் இருக்கும்.பிறப்புறுப்புக்குள் நகங்கள் கொண்ட விரல்களால் சுத்தம் செய்வது, ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் சோப் போட்டு கழுவுவது, அந்த பகுதியில் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதெல்லாம் கூடவே கூடாது.

இந்த அதீத சுத்தத்தால், பிறப்புறுப்பின் அமிலத்தன்மை குறைந்து தொற்று ஏற்படலாம்.வாய் உலர்ந்து புண் வராமல் இருப்பதற்காக எச்சில் சுரப்பது போல, பிறப்புறுப்பிலும் வாடையில்லாத, நிறமற்ற திரவம் கசியும். அந்த திரவத்தில் 3.8 முதல் 4.5 சதவீதம் வரை அமிலத்தன்மை இருக்கும். இது 'பிஹெச் பேலன்ஸ்' எனப்படும். இது பிறப்புறுப்புக்கு கிருமிகள் நுழையாமல் அழித்துவிடும்.கடைகளில் விற்பனையாகிற ரசாயனங்களால் சுத்தம் செய்வது, தாம்பத்திய உறவின்போது கிருமித்தொற்று ஏற்படுவது, மாதவிடாய் போது பயன்படுத்தும் சுகாதாரமற்ற 'மென்ட்ஸ்ருவல் கப்', கடினமான சோப், கருத்தடைக்கு பயன்படுத்தும் நுரை அல்லது ஜெல்லி, டாய்லெட் டிஷ்யூ பேப்பர், பிறப்புறுப்பு வறட்சியை சரி செய்ய பயன்படுத்தும் க்ரீம், காண்டம் ஆகியவை பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட காரணங்களாக உள்ளன.

பொதுவாக மூன்று வகையான தொற்றுகளே அதிகம் வரும். அமிலத்தன்மை குறையும்போது வருகிற பாக்டீரியா தொற்று, நிறைய நீர் அருந்தினால் சரியாகிவிடும்.அடுத்து 'பாராசைட்' தொற்றால் பிறப்புறுப்பு வீங்கி, சிவந்து, கூடவே அரிப்பும், மீன் வாடையும் வரும். ஈஸ்ட்டால் வரும் தொற்று, தயிர் போல் வெள்ளைப்படும். இது பிறப்புறுப்பின் உள்பகுதியிலும் ஒட்டியிருக்கும் என்பதால் அந்தப் பகுதியே சிவந்து, வீங்கி வலிக்கும். கூடவே, சிறுநீர் போகும்போது எரிச்சலிருக்கும்.இந்த பிரச்னைகளுக்கு தானாக சரியாகிவிடும் என்ற அலட்சியம் வேண்டாம்.

மருத்துவ தீர்வுகள் இருக்கின்றன. மலம் கழித்த பின், ஆசன வாயை நீரால் சுத்தம் செய்யும்போது, கைகள் முன் பக்கத்திலிருந்து பின்பக்கமாகத்தான் செல்ல வேண்டும். பின்பக்கத்திலிருந்து முன்பக்கமாக நீர் ஊற்றி சுத்தம் செய்தால், மல கிருமிகள் பிறப்புறுப்புக்குள் சென்று தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பெண் குழந்தைகளுக்கு இதை கட்டாயம் சொல்லித் தர வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X