பொது செய்தி

இந்தியா

பஞ்சாப் நேஷனல் பேங்க் அபராதம் வாயிலாக ரூ.170 கோடி வசூல்

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த, 'பஞ்சாப் நேஷனல் பேங்க்', வங்கி கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, கிட்டத்தட்ட 170 கோடி ரூபாயை, அபராதமாக வசூலித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது.கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், இந்த தொகை, சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும்
பஞ்சாப் நேஷனல் வங்கி, PNB, fine,அபராதம்

புதுடில்லி: பொதுத்துறையை சேர்ந்த, 'பஞ்சாப் நேஷனல் பேங்க்', வங்கி கணக்கில், குறைந்தபட்ச தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களிடம் இருந்து, கிட்டத்தட்ட 170 கோடி ரூபாயை, அபராதமாக வசூலித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், இந்த தொகை, சேமிப்புக் கணக்கு மற்றும் நடப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய 2019 - 20 நிதியாண்டில், இதே அபராத விதிப்பின் வாயிலாக, 286 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த, சமூக செயற்பாட்டாளர் சந்திர சேகர் கவுர் என்பவர், தகவல் அறியும் உரிமை வாயிலாக இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.


latest tamil news



மேலும் இவ்வங்கி, கடந்த நிதியாண்டில், ஏ.டி.எம்., கட்டணங்கள் வாயிலாக 74.28 கோடி ரூபாயை வசூலித்துள்ளதும் இதன் வாயிலாக தெரியவந்துள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டான 2019 - 20ல், ஏ.டி.எம்., கட்டணங்கள் வாயிலாக வசூலான தொகை 114.08 கோடி ரூபாய் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-செப்-202120:43:29 IST Report Abuse
அப்புசாமி நியாயமான வங்கியா இருந்தா பேலன்ஸ் குறையும் கணக்குகளை முடக்கி கணக்கில் இருக்கும் பணத்தை அவர்களுக்கு திரும்பக் கொடுக்கணும். இங்கே எப்பிடியெல்லாம் உருவலாம்னுதானெ பாக்குறாங்க. கையில் பணம் புரண்டா அவனவன் மினிமம் பேலன்ஸ் வெக்க மாட்டானா? இது மாதிரி உருவலுக்கு நீதிமன்றங்கள், ஏழைப்பங்காள அரசு துணை போகும்.
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
21-செப்-202115:43:33 IST Report Abuse
jayvee கடன் வாங்கிகொண்டு ஏமாற்றிய நபர்களிடமிருந்து எவ்வளவு வசூல் செய்தீர்கள் என்று கேட்டால் வழக்கு நிலுவையில் உள்ளது என்று மட்டுமே பதில் வரும்.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
21-செப்-202112:56:14 IST Report Abuse
Raj வங்கிகளின் சட்ட திட்டத்திற்கு உட்பட்டு கணக்கை நடத்த வேண்டும், இல்லை என்றால் அபராதம் விதிப்பர். உதாரணத்திற்கு, கணக்கில் பணம் இன்றி செக் கொடுத்தால், செக் திரும்ப அனுப்ப படும், அதற்கு அபராதம் விதிக்க படும். இதில் என்ன தவறு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X