உ.பி., துறவி தற்கொலை; சீடர் அனந்தகிரி உட்பட மூவர் கைது

Updated : செப் 21, 2021 | Added : செப் 21, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
பிரயாக்ராஜ்: உ .பி., மாநிலத்தில் பிரயாக்ராஜ்ஜில் உள்ள புகழ் பெற்ற மடத்தின் துறவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனை தொடர்ந்து சந்தேக மரணம் மற்றும் தற்கொலை தூண்டல் குறித்து மடத்தின் சீடர்களிடம் போலீசார் விசாரணையை துவங்கி இது தொடர்பாக சீடர்கள் அனந்தகிரி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.உத்தர பிரதேச மாநிலம் மோண்டா என்ற இடத்தில்

பிரயாக்ராஜ்: உ .பி., மாநிலத்தில் பிரயாக்ராஜ்ஜில் உள்ள புகழ் பெற்ற மடத்தின் துறவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இதனை தொடர்ந்து சந்தேக மரணம் மற்றும் தற்கொலை தூண்டல் குறித்து மடத்தின் சீடர்களிடம் போலீசார் விசாரணையை துவங்கி இது தொடர்பாக சீடர்கள் அனந்தகிரி உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.latest tamil newsஉத்தர பிரதேச மாநிலம் மோண்டா என்ற இடத்தில் உள்ளது பாகம்பரி மடம். இங்கு அகில பாரதிய அகரா பரிஷத் என்ற துறவியர் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைவராக இருந்தவர் நரேந்திர கிரி. நேற்று (20ம் தேதி) அவர் மடத்திற்குள் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்வை உண்டாக்கியது. இவரது மறைவு குறித்து பிரதமர், மாநில முதல்வர் யோகி, யோகாகுரு பாபா ராம்தேவ் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.


latest tamil newsகடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவிட் பாதிப்பில் குணம் பெற்றாலும் மன உளைச்சலில் இருந்ததாக முதலில் கூறப்பட்டது. இதன் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என மடத்தில் உள்ளவர்கள் போலீசாரிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் துறவி கிரி ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். இதில் சில சீடர்கள் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இதனால் போலீசார் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அறிந்தனர். இதனையடுத்து செக் ஷன் 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மடத்தில் கிரியின் உதவியாளர் ஆனந்த்கிரி மற்றும் 2 சீடர்களை கைது செய்து போலீசார் பல கோணங்களில் விசாரிக்கின்றனர்.


தற்கொலைக்கு முன் வீடியோ


இதற்கிடையில் நரேந்திரகிரி தற்கொலைக்கு முன்னதாக அவர் ஒரு வீடியோவில் பேசி பதிவு செய்த ஆவணம் ஒன்றும கிடைத்துள்ளது. இதில் துறவி என்ன பேசியுள்ளார் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. மேலும் துறவி மரணத்தில் சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இதற்கிடையில் மறைந்த துறவி கிரி உடலுக்கு முதல்வர் யோகி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
21-செப்-202120:41:25 IST Report Abuse
GANESUN ஸ்டாலின் மேல் போடறதுக்கு கற்பனை தேவயேயில்லை..பூனை மேல் பதில், காணோம்னா அது புருஷனா..மாடா. குடியரசுதினம்.. சுதந்திரதினம்..கூட்டு தோகை இப்படி லிஸ்ட் போயிகிட்டே இருக்கு.
Rate this:
Cancel
Venka Venka -  ( Posted via: Dinamalar Android App )
21-செப்-202120:37:48 IST Report Abuse
Venka Venka PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel
வல்லவரையன் - பல்லவ நாடு,இந்தியா
21-செப்-202119:36:21 IST Report Abuse
வல்லவரையன் “இந்த கொசுத் தொல்ல தாங்கலைடா... அடிச்சுக் கொல்லுங்கடா...” கவுண்டமணி காமெடி மாதிரி...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X